ஆரோக்கியம்சமையல் குறிப்புயூடியூபெர்ஸ்வாழ்க்கை முறை

ருசியான பெப்பர் முட்டை ஃபிரை ரைஸ்

பரபரப்பான இன்றைய உலகில் நாகரிக வாழ்க்கை பெருகப் பெருக மக்களின் எண்ணங்களும் அதி வேகமாக மாறிக் கொண்டு உள்ளது அதில் இப்பொழுது இருக்கும் அனைவரும் உணவே ருசித்து ரசித்து சாப்பிட விரும்புகின்றனர் வகை வகையான உணவுகளை அது எங்கு இருந்தாலும் தேடி சென்று சாப்பிட்டு பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இன்றைய இளைஞர்கள் மத்தியில் உள்ளது இப்படி தேடி தேடி உண்ணும் உணவில் முக்கிய இடம் பிடிப்பது பிரைட் ரைஸ் இந்த உணவை பிடிக்காத மனிதர்களை இருக்க முடியாது அத்தனை பேரும் ஃபாஸ்ட்புட் கடைக்கு சென்றால் முதலில் அவர்கள் வாயில் வருவது பிரைட் ரைஸ் எத்தகைய ருசி மிகுந்த உணவு மிகவும் சத்தாகவும் ஆரோக்கியமாகவும் அமைந்தால் எதனை மகிழ்ச்சியாக இருக்கும் ஆம் ஃபாஸ்ட் ஃபுட் என்றால் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பலரும் நம்பி வருகின்றனர் ஆனால் இந்த ரெசிபியோ முட்டை காய்கறி உடலுக்கு நன்மைகள் தரும் மிளகு ஆகியவை சேர்த்து சமைப்பதால் இந்த உணவு மிக ருசியாக அமைவதோடு மட்டுமல்லாமல் உங்கள் பசியை போக்கவும் உங்கள் உடலுக்கு ஆரோக்கிய ஒரு ருசியான விருந்தாகவும் அமையும் எத்தகைய ரெசிபியை உங்கள் வீட்டிலேயே செய்து நீங்கள் சாப்பிடலாம் கடை கடையாக தேடி அலைந்து சாப்பிட வேண்டிய அவசியம் இனி உங்களுக்கு இல்லை.

தேவையான பொருட்கள்

முட்டை – 5

white ரைஸ் – 1 கப்

பச்சை மிளகாய் – 1

கேரட் – 1

பீன்ஸ் – 1/4 கப்

குடை மிளகாய் – 1

பெப்பர் – 4 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

சோயா சாஸ் – 1 டீஸ்பூன்

வினிகர் – 1 டீஸ்பூன்

முட்டைகோஸ் – 1/4 கப்

செய்முறை

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடாய் சூடானதும் அதில் மூன்று டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி நாம் எடுத்து வைத்த ஐந்து முட்டையை உடைத்து ஊற்ற வேண்டும். அதில் ஒரு டீஸ்பூன் அளவு மிளகுத்தூள் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். முட்டை சிறுசிறு துண்டுகளாக ஆகும்படி கிளறிவிட்டு அதனை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பின்பு அதே கடாயில் 2 டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி கேரட் ,பச்சை மிளகாய் ,குடைமிளகாய் ,பீன்ஸ் மற்றும் நறுக்கிய முட்டைக்கோஸ் ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் . பின்பு அதில் தேவையான அளவு உப்பு மற்றும் 2 டீஸ்பூன் அளவு மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி விடவும். கிளறிய இந்த கலவையில் நாம் ஏற்கனவே வறுத்து வைத்திருந்த முட்டையை சேர்க்க வேண்டும். பின்பு அதில் ஒரு டீஸ்பூன் அளவு சோயா சாஸ் மற்றும் வினிகர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

அனைத்தும் நன்றாக வதங்கிய பின்பு நாம் எடுத்து வைத்து உள்ள ஒரு கப் அளவு உதிரி உதிரியாக உள்ள சாப்பாடு கொட்டி கிளற வேண்டும். ஒரு இரண்டு மூன்று நிமிடங்கள் அதனை அடுப்பிலேயே விட்டு விடுங்கள். பின்பு சாப்பாட்டின் மேல் சிறிதளவு மிளகுத்தூள் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி தழை ஆகியவற்றை மேலோட்டமாக தூவி லேசாக கிளறி விட்டு அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சூடான சுவையான மிகவும் ஆரோக்கியமான நீங்கள் மிக விரும்பும் பெப்பர் முட்டை ப்ரைடு ரைஸ் ரெடி….

இனி நீங்கள் பிரைடு ரைஸ் சாப்பிட அங்கும் இங்கும் கடைகளை தேடி அலைய வேண்டாம் நீங்களே வீட்டில் செய்து மனமாற உங்கள் கைப்பட செய்த உணவை சாப்பிட்டு மகிழுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *