Tasty Garlic curry recipe: சுவையும் ஆரோக்கியமும் ஒரே குழம்பில் எப்படி செய்வது வாங்க பார்க்கலாம்..
நமக்கு பிடித்த உணவுகளை தேடித் தேடி தேர்ந்தெடுத்து உண்பது எவ்வளவு முக்கியமோ அதனை ஆரோக்கியமாக உண்பதும் அதைவிட அவசியம் . நாவிற்கு சுவை தேவைப்பட்டால் நம் உடலுக்கு ஆரோக்கியம் தேவைப்படும். எனவே விருப்பமுள்ள உணவுகளை உண்பதற்கு முன் அதனுடன் ஆரோக்கியமும் சேர்ந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
சுவை நிறைந்த உணவுகள் எங்களுக்கு பிடித்த உணவுகள் என்றால் நாங்கள் ஈசியாக சாப்பிட்டு விடுவோம் , ஆரோக்கியத்தை தேடி செல்லும் பொழுது சில உணவுகளை எங்களால் அதன் சுவையை உண்ண முடியவில்லை என்று வருத்தப்படும் நபர்களுக்காக இதோ ஆரோக்கியமும் அட்டகாசமான சுவையும் சேர்ந்த பூண்டு குழம்பு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். பூண்டின் நன்மைகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள். நம் உடலுக்கு பலவித நலன்களை தேடித் தரும் அதனோடு நம் நாவிற்க்கு தேவைப்படும் சுவையும் ஒரே குழம்பில் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பூண்டு – 15 முதல் 20 பல்
சின்ன வெங்காயம் – 10
கடலைப்பருப்பு – 2 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 2 ஸ்பூன்
வெந்தயம் – 1 ஸ்பூன்
துவரம் பருப்பு – 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 6
வர மல்லி – 2 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
தக்காளி – 2
புளிக்கரைசல் – தேவையான அளவு
பூண்டு குழம்பு செய்முறை
முதலில் தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்பு நாம் எடுத்து வைத்த புளியை ஊற வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றாமல் கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு ,வெந்தயம் ,துவரம் பருப்பு ,காய்ந்த மிளகாய், சீரகம் ,வர மல்லி ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்தெடுக்க வேண்டும். பின்பு அதனை மிக்ஸியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும் .
இதன் பின்பு அதே கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்த பின்பு நறுக்கி வைத்த சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து எண்ணெயில் நன்கு வதக்க வேண்டும். பூண்டு மற்றும் வெங்காயம் வதங்கிய பின்பு நறுக்கி வைத்த தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயத்தூள் சிறிதளவு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். தக்காளி வதங்கிய பின்பு நாம் அரைத்து வைத்த மசாலா மற்றும் புளிக்கரைசல் சேர்த்து கிளறி விடவும். இதன் பின்பு உங்களுக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
சிறிது நேரம் கொதித்த பின்பு சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி விட்டு அடுப்பை அணைத்து இறக்கி விடவும். அவ்வளவுதான் ஊரே மணக்கும் அளவு ஆரோக்கியமான மற்றும் நீங்கள் எதிர்பார்த்திராத சுவையில் சூப்பரான பூண்டு குழம்பு ரெடி…