கிராமத்திற்கே ராஜாவாகிய ஈக்கள்… ஈக்களுக்கு அடிமையாகிய கிராம மக்கள்
தாராபுரம் அருகே முறையான அனுமதியின்றி செயல்பட்டு வரும் முட்டைக் கோழிகள் உற்பத்தி பண்ணையால் ஈக்களின் தொல்லை ,கிராமங்களுக்குள் படை எடுக்கும் லட்சக்கணக்கான ஈக்களால் தொற்று நோய்கள் பரவும் அபாயம், 20 கிராமங்களைச் சார்ந்த பொது மக்களின் புகாரால் சம்பவ இடத்தை பார்வையிட வந்த அமைச்சரிடம் நேரில் புகார்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த நஞ்சுண்டாபுரம் காளிபாளையம் பகுதிகளில் தனியாருக்குச் சொந்தமான முட்டைக் கோழிகளை உற்பத்தி செய்யும் ஐந்துக்கு மேற்பட்ட மெகா கோழிப்பண்ணைகள் கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன, முறையான அரசு அனுமதி பெறாமல் பண்ணை ஒன்றுக்கு 5 ஆயிரம் கோழிகள் மட்டுமே வளர்க்க வேண்டும் என்ற சுற்றுச்சூழல் துறையின் கட்டுப்பாடுகளை மீறி பண்ணை ஒன்றுக்கு 50 ஆயிரம் கோழிகள் வளர்க்கப்பட்டு இங்கு வழங்கப்பட்டு வருவதாகவும் இதேபோல் ஒரே இடத்தில் 6 கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருவதாகவும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கோழிப் பண்ணையின் கழிவுகளை அகற்ற வேண்டும் என்பதால் கோழிப் பண்ணையில் இருந்து உற்பத்தியாகும் லட்சக்கணக்கான ஈக்கள் கோழிப் பண்ணையை சுற்றிலும் உள்ள நஞ்சுண்டாபுரம்,காளிபாளையம், புளியமரத்து பாளையம், அத்திமரத்தை பாளையம் ,திம்ம நாயக்கன் பாளையம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் படை எடுத்தது போல் புகுந்து கிராம மக்கள் உண்ணும் உணவிலும் குடிக்கும் தண்ணீரிலும் நூற்றுக்கணக்கில் ஈக்கள் மொய்த்து பாடாய்படுத்தி வருவதாகவும் இப்பகுதியில் செயல்படும் அரசு ஆரம்பப் பள்ளியில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகள் அந்த உணவை சாப்பிடவே முடியாத அளவுக்கு ஈக்களின் தொல்லையால் கடுமையாக பாதிக்கப்பட்டு குழந்தைகளின் உடல் நலமும் முதியவர்கள் மற்றும் விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளுக்கும் நோய் தொற்று ஏற்படுவதாக கிராம மக்கள் கடந்த 4 ஆண்டுகளாக அரசுக்குப் புகார்கள் குவித்து வந்தனர்
கோழிப் பண்ணையின் உரிமையாளர் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொறுப்பிலுள்ள பிரமுகர் ஒருவருக்கு நெருக்கமான உறவினர் என்ற காரணத்தால் புகாரைப் பெற்றுக் கொள்ளும் அரசு அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டி வருகின்றனர் என்றும் அதிகாரிகளின் நடவடிக்கை இன்மையால் ஈக்களின் தொல்லை தாங்க முடியாத பலர் கிராமத்தை காலி செய்து விட்டு வெளியூர்களுக்கு சென்று விட்டதாகவும் கிராம மக்கள் புகார்களை குவித்தனர்
இது பற்றிய தகவல் அறிந்த தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சரும், தாராபுரம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான திருமதி கயல்விழி செல்வராஜ் பிரச்சனைக்கு காரணமான நஞ்சுண்டாபுரம் கிராமத்தில் செயல்படும் அரசு ஆரம்பப் பள்ளியையும் அங்கு சத்துணவு சாப்பிடும் குழந்தைகளை உணவு உண்ண விடாமல் சூழ்ந்து மொய்க்கும் ஈக்களின் தொல்லை களையும் நேரில் பார்வையிட்டார்
அமைச்சரின் வருகை பற்றி அறிந்த கிராம மக்கள் பள்ளி வளாகத்தில் குவிந்து கோழி பண்ணையில் இருந்து பரவும் ஈக்களால் தொடரும் தங்களது அவல நிலை குறித்தும் அதனால் பரவிவரும் நோய்த்தொற்று குறித்தும் புகார்களை கூறினர் உரிய அனுமதி இன்றி செயல்பட்டு வரும் கோழிப் பண்ணைகள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து தங்கள் கிராமங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் அனைவரும் சாலை மறியல் போராட்டங்களில் இறங்குவதை தவிர வேறு வழி இல்லை என ஆவேசத்துடன் கூறினர்