தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு விதிமுறைகள்
#lockdown #ஊரடங்கு
தமிழ்நாட்டில் ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 31 வரை தளர்வுகளுடன் கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் 31 வரை அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள் பொதுமக்கள் முழுமையாகக் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மூன்றாம் கட்ட தளர்வுகளுடன் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. நாடுமுழுவதும் அன்லாக் unlcok 1, unlock2 என்ற ஊரடங்கு தளர்வு மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் அதிகரித்து வருவதால் மார்ச் 24 ஆம் தேதி முதல் தற்போது வரை ஊரடங்கு என்பது பொதுவாகப் பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டங்கள் மட்டும் இதுவரை முதல் கட்டம், இரண்டாம் கட்டம் என ஐந்து கட்டங்களைக் கடந்து வருகின்றன. ஆறாவது கட்டத்தில் ஊரடங்கு நடைமுறையில் மத்திய அரசு மட்டும் அன்லாக் இரண்டு என்ற அடிப்படையில் அழித்து வருகின்றது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு வரும் ஆகஸ்ட் 31 வரை தமிழ்நாட்டில் தரவுகளுடன் ஊரடங்கு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஊரடங்கு குறித்து நிபுணர்களுடன் தமிழக முதலமைச்சர் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு அமலில் இருக்கும். 144 தடை உத்தரவு சட்டத்தின் கீழ் ஊரடங்கு அமலில் இருப்பதால் 5 நபர்களுக்கு மேல் கூட கூடாது. அதனைப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
ஊரடங்கு காரணமாகத் தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள் என்னவென்று மக்கள் அறிந்துகொள்ள வெளியிடப்பட்டுள்ளது. அறிக்கையில்
தமிழகத்தைப் பொருத்தவரை தொழில் நிறுவனங்களில் 50 சதவீத தொழிலாளர்கள் மட்டுமே பணியில் இருக்க வேண்டும்.
தனியார் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யப்படும் தொழில்கள் இத்தகைய பணியிடங்களில் 75 சதவீத பணியாளர்கள் தற்போது முதல் அனுமதிக்கப்படுவார்கள்,
தமிழ்நாட்டில் ஊராட்சி, பேரூராட்சி நகராட்சி பகுதிகளில் கோவில்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் அனுமதியுடன் பொது தரிசனம் செய்ய மக்கள் செல்லலாம். பெரிய வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் தரிசனம் என்பது தடை செய்யப்பட்டுள்ளது.
காய்கறிகள் மார்க்கெட்டுகள் மளிகை கடைகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை இயக்கலாம். காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை இயங்க தமிழக அரசு இதற்கு முன்னிருந்த ஓரிடத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும். தற்போது காலை 10 மணி முதல் மாலை 7 மணிவரை இயக்கலாம் என்று அறிவித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களான பால் மற்றும் மருத்துவப் பொருட்கள் எப்போதும் கிடைக்கப்பெறும்.
ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்ல வேண்டுமென்றால் இ-பாஸ் வாங்க வேண்டும். ஒரு மாவட்டத்திலிருந்து வெளி மாநிலத்திற்கு வேலைக்குச் சென்றாலும் இ- பாஸ் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல்களில் உணவுப் பொருட்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை பார்சல் மட்டுமே வாங்க அறுகு அனுமதிக்கப்பட்டுள்ளது. டீக்கடைகளில் மக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ள முறைப்படி மீண்டும் அவை தொடங்க வேண்டும். சமூக இடைவெளி என்பது இங்கு அவசியமாகிறது. அமரும் இடத்தில் இருவர் மட்டுமே அமர வேண்டும் ஒருவருக்கொருவர் இடங்களில் 5 மீட்டர் அளவு இருக்க வேண்டும்.