முக ஸ்டாலினுக்கு இருக்கும் சவால்கள்
கலைஞர் கருணாநிதியின் வாரிசு அவருடைய அரசியலுக்கும் இவர்தான் வாரிசு என்று பலராலும் பாராட்டப்பட்டவர்.
ஆனால் கலைஞர் கருணாநிதி இவருக்குப் பதவியை மிக காலதாமதமாக அளித்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் அப்போது எழுந்தது இருந்தாலும் அது அந்த அளவுக்குப் பெரிதுபடுத்தப் படவில்லை.
கலைஞர் உடல்நிலை சரியில்லாத இருந்த காலத்தில் இவர் செயல் தலைவராக செயல்பட்டார். கலைஞர் கருணாநிதி மறைவுக்கு பின்னர் இந்த ஆட்சி ஸ்டாலின் மூலம் கைப்பற்றப்படும் என்று அனைவரும் ஆரூடம் கூறினர் ஆனால் அது இதுவரை நடைபெறவில்லை.
எடைப் போடத் தவறினாரோ
எல்லோரைப் போலவே இவரும் ஆரம்பகட்டத்தில் எடப்பாடியை மிக எளிதாக எடுத்துக் கொண்டு விட்டாரோ என்கின்ற எண்ணம் வலுத்து வருகிறது.
அவருக்கு கலைஞர் கருணாநிதி அளவிற்கு அரசியல் சாணக்கியத் தன்மை இல்லை என்றும் அரசியல் விமர்சகர்கள் நேரடியாகவே கூறுகிறார்கள்.
முக ஸ்டாலின் முயற்சி
70 வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் மூக ஸ்டாலின் அவர்களுக்கு இந்த தேர்தல்தான் ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
இதில் எப்பாடுபட்டாவது வெற்றிக் கொடி நாட்ட வேண்டும் என்று அவர் அயராது பாடுபட்டு கொண்டிருக்கிறார்.
ரஜினி அரசியல் கட்சி
இதோ வருகிறேன் இதோ வருகிறேன் என்று கூறிக் கொண்டு இருந்த நடிகர் ரஜினிகாந்த் அதிரடியாக அரசியல் கட்சி ஜனவரி மாதத்தில் தொடங்கப்படும் என்று அறிவித்துவிட்டார். இந்த அறிவிப்பும் இவருக்குச் சற்று பின்னடைவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
எது எப்படி இருந்தாலும் பல தடைகளையும் கடந்து ஆட்சியைப் பிடித்து விடுவார் என்று தான் நம்பப்படுகிறது.
மக்கள் செல்வாக்கு யாருக்கு
நடிகர் ரஜினிகாந்தின் அறிவிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் மக்கள் செல்வாக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு சற்று கூடிகொண்டே தான் வருகிறது.
இவர்களின் ஆஸ்தான கூட்டணி கட்சியான காங்கிரஸ் இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் தேர்தலில் படுதோல்வியை சந்தித்து வருகிறது.
கூடா நட்பா காங்கிரஸ்
முன்னரே கலைஞர் கருணாநிதி கூறியது போல “காங்கிரஸ் கட்சி ஒரு தேவையில்லாத சுமையாகவும்” ” கூடா நட்பு கேடில் முடியும்” என்பது போலவும் தான் செயல்பட்டு வருகிறது.
இதையெல்லாம் அவர் எப்படி சமாளித்து முதலமைச்சர் நாற்காலியை பிடிக்கப் போகிறார்…? காலம் தான் பதில் சொல்லும்.
சா.ரா