தமிழகத்தில் கனத்த மழை பெய்யும்.
தமிழகத்தின் வளிமண்டல் மேலடுக்கு சுழற்சியால் 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் சிவகங்கை மாவட்டம் 12 மீட்டர் மழையளவும், காரைக்குடியில் 11 சென்டி மீட்டர் மழை அளவு பதிவாகி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியினால் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
திருநெல்வேலி, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை இருக்கும் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி. தர்மபுரி, சேலம், ஈரோடு, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் திருவாரூர் புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வழங்கியுள்ளது.
தென் மாவட்டங்களான ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி போன்ற மாவட்டங்களில் ஆறு சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. சென்னையில் மேகமூட்டம் காணப்படும் என்றும் குறைந்த அளவு மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.
வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி வங்க கடலில் சூறாவளி காற்று 40 கிலோ மீட்டரில் இருந்து 50 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று சூறாவளி வீசும் என்ற தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
கேரளா, லட்சத்தீவு போன்ற மாநிலங்களிலும் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருப்பது சிறந்தது என்பதனை அறிவித்துள்ளது.