சென்னை மாணவி பலி…!
தெலங்கானாவில் பயிற்சியின்போது விமானம் கீழே விழுந்ததில் தமிழகத்தைச் சேர்ந்த விமானி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
ஆந்திராவின் குண்டூர் பகுதியிலிருந்து சென்றுகொண்டிருந்த போது தெலங்கானாவின் நல்கொண்டா பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளது. விமான பயிற்சியின்போது சிறிய ரக விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் உயிரிழந்த பயிற்சி விமானியின் பெயர் மகிமா என்பதும், அவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் அவருடன் சென்ற விமானி ஒருவரும் உயிரிழந்தார் என்றும் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய பிரதேசத்தில் இதேபோன்ற பயிற்சி விமான விபத்து நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக விமனப்படை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவி உயிரிழப்பால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர்.