தமிழக மீனவர்கள் கைது….பாமக நிறுவனர் ரமதாஸ் கண்டனம்.
வங்ககடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்துள்ளது.
நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தில் இருந்து அமிர்தலிங்கம் என்பவருக்கு சொந்தமான படகில் கடந்த 29-ம் தேதி, அக்கரைப் பேட்டையைச் சேர்ந்த வினோதன், கந்தன், நரசிம்மன், மணி, செல்வம், மணிகண்டன், தேவா, ஹரி, குணால், வெற்றி, ஆறுமுகம், அமிர்தலிங்கம் ஆகிய 12 பேர் மீன்பிடிக்க வங்க கடலுக்குச் சென்றனர். நேற்று இரவு ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இவர்களை, எல்லைதாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் வழிமறித்து கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட யாழ்ப்பானம் சிறையில் அடைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையால தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டுவது நாகை மீனவர்களிடம் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “கடந்த மாதம் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 55 மீனவர்களில் 3 பேரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டதால் அவர்கள் இன்னும் நாடு திரும்பமுடியவில்லை. அதற்குள் மேலும் 21 மீனவர்களை கைது செய்வது அத்துமீறலின் உச்சம். இவர்களுக்கும் கொரோனா பரவும் அச்சம் உள்ளதால் சிறையில் அடைக்காமல் விடுதலை செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.