இனி தமிழ் கட்டாயம்…சீருடை தேர்வாணையம் அதிரடி…!
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல்வேறு மாற்றங்களையும், அறிவிப்புகளையும் செய்து வருகிறது. அதன்படி #சீருடை பணியாளர் தேர்வாணையம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது இனி, காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வில் தமிழ் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காவலர் மற்றும் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மாற்றம் கொண்டு வந்துள்ளது.
அதன்படி தமிழ் தேர்வு 80 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் என்றும், அதில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும் என தெரிவித்துள்ளது.
மேலும் தமிழ் தேர்வில் தேர்ச்சி பெறுவோரின் ஓ.எம்.ஆர். விடைத்தாள் மட்டுமே திருத்தப்படும் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.