தன்னம்பிக்கை நாயகன் தகனம் புறப்படுகின்றார்
சுஷாந்த் உடல் பரிசோதனை முடிந்தது. சுஷாந்த் சிங் கை போச்சே படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். சுஷாந்த் முதல் படம் நல்ல ஹிட்டானது. எம்எஸ் தோனி தி ஸ்டோரி ஸ்டோரி படம் மெகா ஹிட் அடித்தது.
எந்த அளவிற்கு தோனியைத் தெரியுமோ அந்தளவிற்கு நாட்டு மக்களுக்கு சுஷாந்த் அந்த அளவிற்கு பிரபலமானார். மொழிகளைக் கடந்து மக்கள் மனதில் நின்றார். இவரது உடல் பரிசோதனையில் தற்கொலை செய்துகொண்டது உறுதியாகிவிட்டது. இஷாந்த் தற்கொலை செய்து கொள்ளப்பட்ட போது வீட்டில் நண்பர் மற்றும் சமையல் வேலை செய்பவர் இருந்ததாக கூறியுள்ளனர். எது எப்படியோ சிறிய வயதில் ஒரு சகாப்தம் முடிந்தது இருந்திருந்தால் எத்தனையோ சாதித்து இருக்கலாம்.
வாழ்வென்றால் வருவதும் போவதும் ஆயிரம் இருக்கும் அதற்காக உயிர் கொடுத்தாள், அனைத்தும் சரியாகுமா என்ன, உயிர் கொடுத்தால் அவ்வளவு சரியாக இருக்குமா என்பதை ஒரு முறைக்கு ஆயிரம் முறை யோசித்து விட்டு இருந்திருந்தால் இந்த சிக்கல் வந்திருக்காது. இவர் பல புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்டுபவர் நாசாவில் வேலை பெற கனவாக கொண்டிருந்தவர்.
அறிவியல் ஆய்வுகளில் ஆர்வம் கொண்டிருந்த ஒரு நடிகர் தன்னை அறிவாய் வைத்திருந்த மனிதருக்கு இந்த சோகம் என்று யோசிக்கையில் இதுபோன்ற நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது என்பதை மட்டும் தெளிவாக தெரிகின்றது.
தற்கொலை என்பது பிரச்சனைகளுக்கான முடிவு அல்ல சவால்களை எதிர்கொள்வது சரியான முடிவு என்பதை ஒவ்வொரு சாமானியனும் உணர வேண்டும், அதுவும் ஹீரோவாக இருந்துகொண்டு இந்த முடிவு சுஷாந்த் சிங் எடுத்திருக்கிறார் என்றால், இது சாமானியர்களை எப்படி சிந்திக்க செய்யும் என்பதை ஒருமுறைக்கு இருமுறை யோசித்திருக்கலாம். இதுபோன்று எவருக்கும் இனி நடக்கக் கூடாது என்பதை நாம் தெளிவுடன் இருக்க வேண்டும்.