Imagesசினிமா

அடி தூள் அருண் விஜயின் மாஸான புது கெட்டப்

அருண் விஜய் துரைசிங்கமா முழுசா மாறி இருக்க காட்சிய பாக்குறீங்களா! அருண் விஜய் அப்படின்னு சொன்னா உடனே விக்டர் கதாபாத்திரம்தாங்க முதல்ல ஞாபகத்துக்கு வருது. அந்தக் கதாபாத்திரத்திலேருந்து இவருக்கு நல்ல காலம் பொறந்திருச்சுனு சொல்லலாம்.

2015 எண்ணை அறிந்தால் படம் ரிலீசான பிறகு குற்றம் 23 சூப்பரான ஒரு படம் அடுத்த வருடமே ஹீரோவா நடிச்சு அதுக்கு அடுத்த வருடம் அதாவது 2017 ரிலீஸாயி நல்ல வரவேற்பு கிடைச்சிச்சுங்க.

2018 ல பொன்னியின் செல்வன் நாவலோட ஒரு சிறிய தழுவலா வெளியான செக்கச் சிவந்த வானம் படத்துல தியாகு கேரக்டர்ல பட்டைய கிளப்புனவருக்கு 2019ல இரட்டை வேடம் கதாபாத்திரத்தில தடம் படம் அமஞ்சது. தடம் படத்து மூலமா தமிழ் திரையுலகத்துல மற்றொரு தடம் பதித்தாரு அருண் விஜய்.

விஜயகுமார் மகன் அப்படிங்கற அடையாளத்த விட தனக்கென தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியிருக்கிறாரு அருண்விஜய். 2019 ல ஹிந்தி தெலுங்குனு ரெண்டு மொழிலையும் வெளியான சாஹோ படத்துலையும் இவருடன் கதாபாத்திரம் பெருசா பேசப்பட்டது.

கொரோனா மட்டும் வரலைன்னா 2020 பல படங்கள்ல கையில் வைத்திருக்காரு அருண் விஜய். அப்படியும் கொரோனாலேருந்து தப்பிச்சு 2020தோட முதல்லையே மாஃபியா படம் ரிலீஸ் ஆச்சு.

அருண் விஜயோட ரசிகர்கள் பட்டாளம் இவருக்காக பெருசா காத்திருக்கரப்போ சினம் படத்துக்கான டப்பிங் போயிட்டு இருக்கு. கொரோனா ஊரடங்கு பிறப்பிச்சு இருந்து; இப்போ சில தளர்வுகள் வந்தப்பறம் இந்தப் படத்தோட வேலைய துவங்கி இருக்காங்க இந்த படக்குழுவினர். சினம் படத்துல காக்கி சட்டைல வர அருண் விஜயோட கெட்டப்ப பாக்க சும்மா சூப்பரா இருக்குங்க. அருண் விஜயோட அடுத்தடுத்த படங்கள் என்னென்னனு பார்த்தீங்கன்னா பாக்சர் அக்னி சிறகுகள் ஜிந்தாபாத்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *