ஸ்ருதிஹாசனுக்கு சூப்பரான பர்த்டே கிஃப்ட்
உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் இன்று தனது 36வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.
சூர்யா உடன் 7ம் அறிவு, சிங்கம் 3, விஜய் உடன் புலி, அஜித்துடன் வேதாளம், தனுஷ் உடன் 3, விஷாலுடன் பூஜை, விஜய்சேதுபதியுடன் லாபம் என தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களுடன் நடித்துள்ள ஸ்ருதிஹாசன் டோலிவுட்டிலும் மகேஷ் பாபு, பவன் கல்யாண், ராம்சரண், அல்லு அர்ஜுன் என ஏகப்பட்ட நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது பிரபாஸ் உடன் பிரம்மாண்டமான படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன்
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நாயகி ஸ்ருதிஹாசன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நான் அனைவருக்கும் நன்றிக்கடன் பட்டவள். நான் மிகவும் நேசிக்கப்படுகிறேன். எனக்கு கற்றுக் கொள்ள, பார்க்க, நேசிக்க இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன.அன்பு எப்போதும் வழி நடத்தும், அனைவருக்கும் மிக்க நன்றி” என, பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், சலார் படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகை ஸ்ருதிஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தில் அவர் ஆத்யா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்கிற அறிவிப்புடன் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு சூப்பரான பர்த்டே கிஃப்ட்டை நடிகை ஸ்ருதிஹாசனுக்கு வழங்கி உள்ளார்.