ஆரோக்கியம்செய்திகள்யூடியூபெர்ஸ்வாழ்க்கை முறைவிழிப்புணர்வு

ulcer tips: அல்சர் பிரச்சினையால் தவிப்பவரா?? இதை தினமும் ஃபாலோ பண்ணுங்க அல்சர் பறந்து போகும்

நாம் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது எப்பொழுதும் முக்கியமல்ல அளவாக சாப்பிட்டாலும் அதனை சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும். சரியான நேரத்திற்கு அளவான உணவு உண்பதால் உடலுக்கு எந்த பிரச்சனையும் வருவதில்லை ஆனால் ஏனோதானோ என்று ஏதாவது ஒரு நேரத்தில் கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டு வருவதால் தான் நமக்கு அல்சர் பிரச்சினை ஏற்படுகிறது.

அல்சர் என்பது மிகப்பெரிய நோய்களில் ஒன்றாக உள்ளது பல பேர் அல்சர் பிரச்சினையால் வயிறு வலி தாங்காமல் துடிப்பர் மேலும் அவர்கள் நினைத்த உணவுகளை சாப்பிட முடியாமல் தவிப்பர். எனவே எப்பொழுதும் சரியான நேரத்தில் நமக்கு ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதில் என்றும் கவனமாக இருங்கள் முக்கியமாக காலை உணவை தவிர்க்காமல் இருந்தாலே உடல் மிக ஆரோக்கியமாக இருக்கும் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். இவ்வாறு அல்சர் பிரச்சனையால் அவதிப்படும் நண்பர்கள் கீழே கொடுக்கப்படும் ஒரு சில வழிமுறைகளை பின்பற்றினால் கூடிய விரைவில் அல்சர் பிரச்சனை குணமாகும் இல்லையேல் அல்சரால் ஏற்படும் வயிறு வலியிலிருந்து சற்று விடுபடலாம்.

அல்சர் உள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

  • தினமும் உங்களது உணவில் தேங்காய் பால் சேர்த்துக் கொள்ள வேண்டும் ஏதாவது ஒரு நேரத்தில் சாதத்தில் தேங்காய் பால் ஊற்றி சாப்பிட்டு வர வயிற்றுப்புண் விரைவில் குணமாகும்.
  • காலையில் டீ காபி குடிப்பதை நிறுத்திவிட்டு முடிந்த அளவு பிரட் மற்றும் வெண்ணெய் சேர்த்து சாப்பிட்டு வர வயிறு அடிக்கடி வலிப்பது சற்று குறையும்.
  • தினமும் காலை வெறும் வயிற்றில் மிதமான சூட்டில் உள்ள நீரில் இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் தேன் கலந்து குடித்து வர வயிற்றில் ஏற்படும் எரிச்சல் குணமாகும். மேலும் வயிற்றில் உள்ள புண்களை ஆற்றவும் பயன்படும்.
  • அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் அல்லது வாரத்திற்கு மூன்று முறை நெல்லிக்காய் ஜூஸில் தயிர் சேர்த்து சாப்பிட்டு வர வயிற்றில் ஏற்பட்ட புண்கள் கூடிய விரைவில் குணமாகும்.
  • மேலும் அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் ஆப்பிள் ஜூஸ், மாதுளை ஜூஸ் ,பீட்ரூட் ஜூஸ், அகத்திக்கீரை சாறு ஆகியவை கொடுத்து வர வயிற்றில் உள்ள புண்கள் சரியாகும் நீங்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஜூஸ் வகை என்று குடித்து வரலாம்.
  • முட்டைக்கோஸ் பாகற்காய் முருங்கைக்காய் ஆகியவை அல்சர் பிரச்சனைக்கு ஒரு சிறந்த உணவாகும் எனவே சிறை உள்ளவர்கள் அடிக்கடி உங்களது உணவில் மேற்குறிப்பிட்ட காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • வெள்ளைப் பூண்டில் தேன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் பிரச்சனை விரைவில் குணமாகும் வெள்ளைப் பூண்டில் பாக்டீரியா எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதால் அல்சர் பிரச்சனைக்கு சிறந்த மருந்தாக இருக்கும்.
  • அடிக்கடி கற்றாழை ஜூஸ் வெந்தயம் கொதிக்க வைத்த தண்ணீர் மற்றும் வெந்தய தண்ணீரில் தேன் கலந்து குடிப்பது ஆகியவை அல்சர் பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாக அமையும்.

அல்சர் பிரச்சினைகளுக்கு பல உணவுகளையும் காய்கறி வகைகளையும் மற்றும் பல வகைகளையும் பார்த்தோம். இவை அனைத்தும் அல்சர் பிரச்சனைக்கு ஒரு தீர்வாக இருக்கும். ஆனால் இதையெல்லாம் விட முக்கியமான பொருள் ஒன்று உள்ளது. அது வேறு ஒன்றும் இல்லை நாம் அன்றாடம் உயிர் வாழ பருகும் தண்ணீரே .ஆம் அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் எப்பொழுதும் குடிக்கும் தண்ணீரை விட அதிக அளவு தண்ணீர் குடித்து வர விரைவில் வயிற்றில் உள்ள புண்கள் குணமாகி அல்சர் பிரச்சனை தீரும்.

முடிந்த அளவு காலை உணவு சாப்பிடாமல் இருப்பதை தவிர்த்து விடுங்கள். மேலும் சரியான நேரத்தில் உணவு எடுக்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள்.மேலும் எப்பொழுதும் ஏதாவது ஒரு உணவு சாப்பிட்டோம் கடமைக்காக சாப்பிட்டோம் என்பதை விட்டுவிட்டு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதை மனதில் வைத்துக் கொண்டு சாப்பிட்டு வர அல்சர் பிரச்சனை என்பதை உங்களுக்கு இருக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *