உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவர்கள்..
உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் தொடர்பாக வெளியுறவுத்துறை முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
அதாவது ரஷ்யா-உகரைன் இடையேயான போரில் தற்போது வரை 13,300 பேர் உக்ரேனில் இருந்து தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர் ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின்படி 63 விமானங்கள் மூலம் தாயகம் திரும்பியுள்ளனர் என இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் 2500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு உக்ரைனுக்கு வெளியே விமானத்திற்காக காத்துள்ளனர். அவர்களில் சிலர் 13 விமானங்களில் அழைத்து வரப்பட உள்ளனர் என்றும், ஞாயிற்றுக் கிழமைக்குள் அனைவரையும் விமானம் மூலம் அழைத்து வரப்பட்டு, அதன்பிறகு சுமி உள்ளிட்ட பகுதிகளில் சிக்கி இருப்பவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை முழுவீச்சில் தொடங்க உள்ளோம் என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.