புஷ்பா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட கொரிய பெண்..வைரலாகும் வீடியோ..
அல்லு அர்ஜீன் நடிப்பில் உருவான புஷ்ப படத்தின் ஸ்ரீவள்ளி பாடலுக்கு கொரிய பெண் ஒருவர் ஆடிய டான்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் தென்னக நட்சத்திரம் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான் புஷ்பா திரைப்படம் பல மொழிகளிலும் வசூலை அள்ளியது. மேலும் புஷ்பா படத்தில் வெளியான ஓ ஆண்டவா பாடல் சர்சையை ஏற்ப்படுத்தியது. அந்த பாடலுக்கு எதிராக ஆண்கள் சங்கம் வழக்கும் தொடர்ந்து. இருந்த போதிலும் சமந்தாவின் ஆட்டம் அனைவரையும் கட்டிப்போட்டது.
இதனையடுத்து அந்த படத்தின் மற்றோரு பாடலான ஸ்ரீவள்ளி பாடலுக்கு நடிகை ராஷ்மிக நடனமாடினார். இந்த பாடல பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. சிலர் சமூக வலைதளங்களில் இந்த பாடலுக்கு நடனமாடி பதிவேற்றி வந்தனர்.
மேலும் படிக்க : வெறுப்பிலும் உறுதியாக நின்ற ஆரியின் வெற்றி!
அந்த வரிசையில் இப்போது, ஸ்ரீவள்ளி பாடலுக்கு கொரிய பெண் ஒருவர் ஆடிய டான்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை தற்போது வரை 1.1 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.