என்ன தவம் செய்தனை யசோதா!
வயசானாலும் அழகும் அந்தக் இருவிழிகள் பேசும் பார்வையும் இன்னும் விட்டு போகல என்ற போக்கில் சமீபத்தில் வெளிவந்த நம்முடைய ஸ்ரீபிரியா, அவர்களின் யசோதா குறும்படம் நச்சுனு நறுக்குன்னு அமைதியாக இருந்தது. ஆயிரம் அர்த்தங்கள் கொண்ட அரை மணி நேர படம் என்று உணர்ந்த போதும், அந்த விழிகள் பேசும் மொழிகளுக்கு அர்த்தங்கள் ஆயிரம் உண்டு.
விழிகளிலே ஒளியினை பார்க்க முடியும் என்பார்கள், அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் இன்று அந்த ஒளியினை ஸ்ரீபிரியா அவர்களின் குறும்படத்தில் காணமுடிந்தது. நாசர் நடிப்புச் சக்கரவர்த்தி என்று சொல்லலாம்.
சிவா திரைக்கதை என்று நாம் நினைக்கலாம். ஆனால் அவர் உலகத்தின் நடிகர் திலகத்தின் திலகமாக வளர்ந்தவர். அவருடன் இணந்து மருத்துவராக கதாபாத்திரமும் மற்றும் நாசர் அவரின் தங்கையாக வந்தவர்களின் கதாபாத்திரங்கள் என மொத்தம் 5 பேருதான்.
ஆனால் நச்சென்று அடித்தது போல தாய்மை பாசம் தகதகவென மின்னியது. இந்த யசோதா கதையில், என்ன தவம் செய்தனை யசோதா அந்தக் கண்ணனின் வளர்ப்புத்தாய் போன்ற இந்த யசோதா அவரை தாய் என அழைத்து நம்மை தாய் பாசத்தில் சிவா வைத்தார்.
மனைவிக்கு அல்சைமர் வந்துவிட்டது என துடிக்கும்போது ஆணுக்குப் பின் இருக்கும் அன்பினை நாசர் அவர்கள் நாசூக்காக வெளிப்படுத்தியிருப்பார். அம்மா என்று அழைக்கும் ஒரு வார்த்தையில் ஓராயிரம் வித்தைகள் சிவா காட்டியிருப்பார்.
ஊரடங்கு அறிவிக்கப்பட்டு ஊடகங்கள் எல்லாம் சுகபோகமாக தங்களது கருத்துக்களையும் படைப்புகளையும் பாரபட்சமின்றி பரப்பி வர சத்தமில்லாமல் சரித்திரமாக வந்தது. இந்த யசோதா உண்மையில் பின்னணி இசையும், பாடலும் நம் இதயத்திற்கு வருடளாக இருந்தது என்றே கூறலாம்.
வாஞ்சையான கதை நல்ல இயக்கங்கள் கேமராக்களின் பிடிப்பு கெத்து காட்டியது என்று கூறலாம். அருமையான இந்த யசோதா முடிந்தால் அனைவரும் பாருங்கள். இதற்கு மேல் வார்த்தைகள் எல்லாம் உயிர் இருக்குமா என்று தெரியாது. ஆனால் யசோதாவின் இரு வழிகளில் தாய்மை தாண்டவமாடியது விளக்குவதை விட உணர்வதே சிறந்தது. ஒரு வரி வயதானால் என்ன அது வயது ஆற்றல் கற்பிக்கின்றது.