ஸ்ரீ கந்த சஷ்டி திருவிழா: செந்தூரும் திருக்குன்றமும்
ஸ்ரீ கந்த சஷ்டி துவங்கியிருக்கும் இந்த நேரத்தில் முருகப்பெருமானின் படை வீடுகளைப் பற்றிய சிறப்பு அம்சங்கள் சில அறியாத விஷயங்கள் சில தெரிந்தும் படிக்கும் பொழுது புதிதாக இருக்கூடிய தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை இந்த ஸ்ரீ கந்த சஷ்டியில் கட்டுரைகளாக காண்போம்.
- முருகப்பெருமானின் முதல் படைவீடு திருப்பரங்குன்றம்.
- யார் அந்த அசுரர்கள்! தெரிந்துகொள்ள அமைத்த படைவீடு திருச்செந்தூர்.
- தேவர்களைக் காத்து இந்திரனின் மகளின் கரம்பிடித்தல்.
முருகன் படைவீடு அமைக்க முக்கியமான காரணம் சூரபத்மனை வதம் செய்வதற்கே அந்த வரலாற்றை காண்போம்.
சூரசம்ஹாரம்
சூரபத்மன் தாரகாசுரன் சிங்கமுகன் எனும் மூன்று அசுர சகோதரர்கள் தேவர்களை சிறைப்பிடித்து மிகவும் கொடுமைப்படுத்தி அராஜகம் செய்தனர். இவர்களிடம் இருந்து தப்பித்து சில தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டு வேண்டினர். அவரும் ‘தக்க சமயம் வரும் பொழுது என் சக்தியால் அவனை வதைப்பேன்’ என்றார்.
கார்த்திகேயனின் வேல்
சிவபெருமானிடமிருந்து 6 தீப்பொறிகள் வந்து குழந்தையாக மாறின. அந்த ஆறு குழந்தைகளையும் கார்த்திகைப் பெண்கள் வளர்த்து வந்தார்கள். பார்வதி தேவி அந்த ஆறு குழந்தையையும் வளர்ந்தபின் ஒரே பாலகனாக மாற்றி ஈராறு கைகளுடனும் காட்சியளித்தார் முருகப்பெருமான். சக்தி கொண்ட வேல்-ஐ இவருக்கு ஜெகதாம்பிகை ஜெகத் ரக்ஷாம்பிகை கார்த்திகேயனின் அன்னை வழங்கினார்.
படைவீடு
முருகப்பெருமான் தன் சேனையுடன் சூரபத்மனை வதம் செய்ய புறப்பட்டு; தன் எதிரியின் பலம் அறிவதற்காக திருச்செந்தூரில் படைவீடு அமைத்து குரு பகவானிடமிருந்து அனைத்து விவரங்களையும் பெற்றார். கடும் போர் நிலவ, சூரபத்மன் முருகப்பெருமானை வெற்றி கொள்ள முடியாது என்ற முடிவெடுத்து மரமாக மாறினான். அன்னை சக்தி கொடுத்த வேலால் அந்த மரத்தை பிளந்தார் முருகப்பெருமான். ஒரு பாதி சேவல் கொடியாகவும் மற்றொரு பாதி மயில் வாகனமாகவும் மாற்றி தன்னுடன் வைத்துள்ளார் முருகப்பெருமான்.
மேலும் படிக்க : பஞ்சமியில் வாராஹியை ஆராதியுங்கள்
தெய்வானையின் கரம் பிடித்தல்
இந்த வெற்றியை கொண்டாடும் பொருட்டு முருகப்பெருமானுக்கு நன்றி கூறும் பொருட்டு தேவேந்திரன் தன் மகனான தேவயானையை திருப்பரங்குன்றத்தில் அனைத்து கடவுள்கள் தேவர்கள் முனிவர்கள் என்ன சபையின் இறங்கிய பெரியோர்களின் முன்னிலையில் மணமுடித்து வைத்தார்.
குறிப்பு
சூரனை வதம் செய்த பிறகே தெய்வானையை கரம் பிடிக்க திருச்செந்தூர் முதல் படை வீடாகவும் திருக்குன்றம் இரண்டாம் படைவீடாகவே இருக்க வேண்டுமே! ஆனால் அவ்வாறு இல்லையே! என்று யோசிப்பவர்களுக்கு வினா எழுப்புபவர்களுக்கும் இந்த கட்டுரை பதிலாக அமையும்.
மேலும் படிக்க : ஆடிப்பூரத்தன்று அம்மனை வழிபட கேட்கும் வரம் கிடைக்கும்
வெற்றிவேல்…. வீரவேல்…..