ஆன்மிகம்

பெண்களுக்கான ஆன்மீக குறிப்புகள்!

ஆன்மீகத்தில் பெண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் !!

கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுகொண்டு கோலமிடக் கூடாது. வடக்கு மற்றும்   சூரியனை வரவேற்று கோலமிடுதல் சிறப்பு மற்றும். வாசல் தெளிக்கும் பொழுது தண்ணீரில் சாணத்துடன் மஞ்சள் கலந்து வாசல் தெளித்தல் சிறப்பு ஆகும்.

திருமணம் ஆன பெண்கள் ஒரே ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும். ஒரே காலில் இரண்டு மூன்று அணிய கூடாது. அணிவதால் ஆரோக்கியம் மற்றும் கணவனின் வளர்ச்சி (உடல், வருமானம்) பாதிப்பு அடையும் என்று முன்னோர்கள்    கூரியுள்ளனர்.

கர்ப்பமான பெண்கள் உக்ரமான தேவதைகள் இருக்கும் கோவிலுக்கு போகக்கூடாது. மேலும் விரதம் கடைப்பிடிக்க வேண்டிய அவசிய இல்லை. கோவிலுக்கு மட்டும் சென்று வரலாம்.

பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் இட்டுக்கொள்ளவேண்டும். திருமணம் ஆகாதவர்கள், உச்சந்தலையில் இட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

 அமாவாசை, தவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.

கோவில்களில் பிரஸாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது. கோவிலில் தெய்வத்தை வணங்கும் பொழுது போது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக்கொண்டு முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்கவேண்டும்.

வெள்ளி, செவ்வாயில் பெண்கள் தலைக்கு குளித்தல் சிறப்பானதாகும். இது தேவையற்ற எதிர்மறை ஆற்றல்களை குறைத்து  ஆன்ம அமைதியை கொடுக்கும்.

சூரியன் உதயத்திற்கு முன்பு எழும் பெண்கள் எப்பொழுதும் வாழ்வில் வெற்றிப்  பெறுவார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *