அய்யோ பல்லியா அடகில்லியா சொல்லி அடிக்கிறாங்களே
பல்லியை பார்க்கும் பொழுதும் சரி பாம்பை பார்க்கும் பொழுது நம்முடைய மனசு பக்கு பக்குன்னு இருக்கும்.ஏனென்றால் அவற்றின் அப்பியர்ன்ஸ் மற்றும் அவை விசத்தன்மை கொண்டது என்ற பயம் தரும். சிலருக்கு பல்லி என்றாலே ஒருவித இன்கன்வீனியன்ஸ் இருக்கும் சிலர் பல்லி அறையில் இருப்பதை விரும்பாமல் கொன்று வெளியே தல்லுவார்கள்.
ஒரு சிலருக்கு பெயரைக் கேட்கும்போதே சிலருக்கு அச்சுறுத்தலாகவும் அருவருப்பாகவும் இருக்கக்கூடும்.
பல்லி என்றால் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்ற உணர்வு :
பல்லி அவரவர் இடத்தில் இருந்து யோசித்தால் பதில் கிடைக்கும். அச்சுறுத்தல் மற்றும் அருவருப்பிற்கான சில காரணங்கள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மாறுபடும்.
பார்வையில் படுத்தி எடுக்கும் பல்லி:
சற்று நாட்கள் முன்பே பிறந்ததாக இருந்தால் வெள்ளை வெளேர் என்று உடல் உறுப்புகள் தெரியுமாறு பார்க்கவே பயங்கரமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் சில வால் அருந்தாலும் பயங்கரமாக காட்சி அளிக்கிறது.
பல்லி நகரும் பொழுது கில்லியாக கவனமாக இருப்போம்:
முன்பெல்லாம் சுவற்றில் ஓடும். இப்பொழுது நம்முடன் ஓட்டப்பந்தயம் நடத்துமாறு தரையில் ஓடுகிறது. ஆம் அது எங்காவது நமக்கு அருகில் நகரும் பொழுது, நாம் கில்லி விளையாடுவது போல் கவனமாக இருப்போம்.
பல்லியில் விஷமா:
பல்லியின் கழிப்பில் விஷம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருபுறம் இருக்கையில் சில வருடத்திற்கு முன்பு ஒரு வார இதழில் வியக்கத்தக்க ஒரு கதை படித்தேன். அதை உங்களிடம் பகிர்கின்றேன், என்னவென்றால் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மனிதர் வீட்டை வாங்கியுள்ளார் அந்த வீட்டில் ஒரு பல்லி கூட இல்லாததால் வீட்டை வித்ததாக சொல்லப்படுகிறது. அந்த அளவிற்கு பல்லிக்கு முக்கியத்துவம் இருக்கின்றது என்ற மேட்டரே அப்பத்தான் தெரிந்தது.
இந்தக் கதையை கேட்டபின் பல்லியை பற்றி அலசி ஆராய்ந்தேன் இத்தனைக்கும் பல்லி என்றால் எனக்கு பல அதிசயங்கள் இருப்பதாக தெரியவருகின்றது. அதனை பகிர்கின்றேன்
லஷ்மி கடாஷாமான பல்லி:
பல்லியை லக்ஷ்மி கடாக்ஷமாக கருதுகின்றனர். ‘நல்ல சகுனம்’ எனவும் ‘கௌளி அடித்தால்’ மனதில் நினைத்த காரியம் நிறைவேறும் என்கின்றனர். பூஜை அறையில் பல்லி வாழ்ந்தால் அதனை குருவின் ரூபமாகவும் மற்றும் இறைவன் பல்லியை வாகனமாகக் கொண்டு பயணிப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பல்லியை கொன்றால் தோஷம் ஏற்படும் எனவும் கூறுகின்றனர். கைய்ஸ் அண்ட் கேள்ஸ் உன்மையா என்று தெரியவில்லை ஆனால் உண்மை இருக்குமோ என்று நமத் தோனுகின்றது.
காஞ்சிபுரத்தில் வரதராஜருடன்:
ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் தங்க மற்றும் வெள்ளி பல்லி இருப்பதை பலர் அறிவோம். அதன் காரணம் இதானுங்க
முனிவர் சிருங்கி பேரர் என்பவரின் இரண்டு மகன்கள் கௌதம மகரிஷியின் சிஷ்யர்களாக பாடம் பயின்று வந்தனர். தினமும் குருவிற்கு ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வருவது, அவர்களது பணி. அவ்வாறு ஒரு நாள் தண்ணீர் கொண்டு வருகையில் அதில் பல்லி இருந்தது. அதை இருவரும் கவனிக்கவில்லை; கௌதம மகரிஷி அதனைக் கண்டு இவ்விருவரையும் பல்லியாகும் படி சபித்தார்.
சிஷ்யர்கள் தன் குருவையே தஞ்சமடைந்து சாப விமோசனத்தை வேண்டினர். அவரும் காஞ்சிபுரம் சென்று ஸ்ரீ வரதராஜப் பெருமாளின் அருளால் உங்கள் சாபவிமோசனம் நிறைவேறும் என கூறினார்.
அதேசமயத்தில் சரஸ்வதிதேவி இந்திரனுக்கும் யானை ஆகும்படி சாபம் குடுக்க அவனும் சாப விமோசனத்திற்காக ஸ்ரீ வரதராஜப் பெருமாளை வேண்டினான். ஒரே சமயத்தில் மூவருக்கும் சாபவிமோசனம் நிறைவேறியது.
அந்த இரு பல்லிகளின் உடல் மட்டும் அங்கேயே இருக்க அதையே நாம் இப்பொழுது தங்கம் மற்றும் வெள்ளி பல்லியாகதொடுகிறோம். அதனை தொட்டால் வலியினால் நமக்கு ஏற்பட்ட தோஷமும் மற்றும் பல தீராத வியாதிகளும் தீரும் என்பது ஐதீகம் இது செமதானே, இதுக்குத்தான் அப்பியரன்ஸ் நெவர் டிசைடு ஃவீச்சர்னு சொராங்களோ,
பல்லி விழும் பலன்கள்
தலை-கலகம்
முகம்-பந்து தரிசனம்
புருவம் மத்தியம்-ராஜா அனுக்கிரகம்
மேலுதடு-தன விரயம்
கீழுதடு-தனலாபம்
முக்கு-வியாதி சம்பவம்
வலது செவி-தீர்காயுசு
இடது செவி-வியாபார லாபம்
நேத்திரங்கள்-காரக்கிரக பிரவேசம்
முகவாய்க்கட்டை- ராஜ தண்டனை
வாய்-பயம்
கண்டம்-சத்ரு நாசம்
வலது புஜம்-ஆரோக்கியம்
இடது புஜம்-ஸ்திரீ சம்போகம்
வலது மணிக்கட்டு-பீடை
இடது மணிக்கட்டு-கீர்த்தி
ஸ்தனங்கள்-பாப சம்பவம்
வயிறு-தான்ய லாபம்
மார்பு-தனலாபம்
நாபி-ரத்தின லாபம்
உபயபாரிசம்-வெகு லாபம்
தொடை-பிதா அரிஷ்டம்
முழங்கால்-சுகம்
கணைக்கால்-சுபம்
பாதம்-பிரயாணம்
புட்டம்-சுபம் பலிக்கும்
நகங்கள்-தன நாசம்
ஆண்குறி-தரித்திரம்
கூந்தல்-மிருத்தியு பயம்