ஆன்மிகம்ஆலோசனை

Yegathesi fasting : புதன்கிழமை ஏகாதசி விரதம் இருப்பதால் கிடைக்கும் அபூர்வ பலன்கள்

ஏகாதசி நாளில் நாம் வாழ்வில் முன்னேற்றம் அடைய கடைபிடிக்க வேண்டிய முக்கிய முறைகளை இங்கு கொடுத்துள்ளோம். இவை காலம் காலமாய் நாம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தவை ஆகும் நாமும் இதனை பின்பற்றி வாழ்வில் வளம் பெறலாம்.

ஏகாதசி விரதம் பயன்கள்

ஏகாதசி விரதம் கடைபிடிப்பதனால் வாழ்வில் செல்வ வளம் அதிகரிக்கும் பெருமாளின் அனுகிரகம் கிடைக்க பெறலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஏகாதசி விரதம் பெருமாள் வழிபாட்டில் முக்கியமான விரதமாக கடைபிடிக்கப்படுகின்றது.

ஏகாதசி விரதம் வாழ்வில் மகாலட்சுமி அருள் பெற அஸ்வ மேத யாகம் செய்த பலன் கிடைக்க ஏகாதசி விரதமானது கடைபிடிக்கப்படுகின்றது.

நாம் நினைத்தது நடைபெற பெருமாள் அருள் கிடைக்க ஏகாதசி விரதம் முக்கிய பங்காற்றுகிறது. வைகுண்டத்தில் பெருமாளின் கமலபாதத்தில் நமக்கு ஒரு முக்கிய பங்காக ஏகாதசி விரதம் இருக்கின்றது.

ஒரு மனிதன் தனது வாழ்வில் 25 ஏகாதசிகள் கடைபிடித்தால் என அவர்களுக்கு வைகுண்ட பதவி கிடைக்கும் என்றும் சொல்லப்படுகின்றது.

ஏகாதசி விரதம் கடைபிடிக்கும் முறைகள்

ஏகாதசி விரதம் தசமி நாளில் தொடங்கி அடுத்த நாள் வரை நீடிக்கும். உணவு சாப்பிடாமல் இந்த விரதத்தை முழுவதுமாக இரண்டு நாட்கள் கடைபிடிப்பவர்களும் உண்டு

தசமி நாளில் நண்பகல் உணவு விடுத்து ஏகாதசி வரை விரதம் கடைபிடிப்பவர்கள் உண்டு. உடல்நிலை சரியில்லாதவர்கள் பழம் பால் சாப்பிட்டு வருவார்கள் ஏகாதசி நாளில் காலையில் நீராடி பெருமானை வணங்கி துளசி தீர்த்தம் பெற்று உபவாசம் இருந்து வருவதனால் நமக்கான பெருமானருள் உறுதியாக கிடைக்கும்.

வயதானவர்கள் கர்ப்ப காலத்தில் இருப்பவர்கள் நோய் உள்ளவர்கள் இந்த விரதத்தை கடைபிடிக்காமல் தங்களால் இயன்ற அளவு முழு பக்தியை செலுத்தினால் சிறப்பு தரும்.

ஏகாதசி நாளில் துளசி விட்டு விரதம் இருந்து வழிபடுவார்கள். மீண்டும் மறுநாள் துவாதசி அன்று குளித்து சமைத்து சாமிக்கு பூஜை செய்து மூன்று நாட்கள் பெருமானை நினைத்து விரதம் இருப்பார்கள் .இதன் மூலம் பெருமானிடம் பக்தியை செலுத்துகிறார்கள். நீங்களும் ஏகாதசி விரதத்தை முடிந்த அளவிற்கு பின்பற்றி பெருமான் அருள் பெறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *