சினிமா

‘பாடும் நிலா’ எஸ்பிபி சாரின் நீங்கா நினைவலைகள்

எஸ்பிபி இதுவரை ஆறு முறை தேசிய விருதுகள் வாங்கியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி பாடல்களைப் பாடியதற்காக பெற்ற விருதுகள் ‘சங்கராபரணம்’, ‘ரூத்ர வீணா’, ‘ஏக் துஜே கேலியே’, ‘மின்சாரக் கனவு’ ஆகிய படங்களும் அடங்கும். ‘ஏக் துஜே கேலியே’ படம் ஹிட்டுக்கு பிறகு மும்பையில் ஒரே நாளில் 19 பாடல்களைப் பாடினார். இது தான் எல்லா பாடல்களையும் விடை எஸ்பிபியின் ஆல்டைம் சாதனையாக அமைந்தது.

12 மொழிகளில் பாடியவர் எஸ்பிபி

இதுவரை 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, ஒரியா, துளு, படகா, மராட்டி என 12 மொழிகளில் பாடியவர் எஸ்பிபி. தன் குரலைப் பாதுகாக்க எந்த சிறப்பு கவனமும் மேற்கொள்வது இல்லை. இனிப்பு, ஐஸ்கிரீம் எல்லாம் சாப்பிடுபவர்.

எஸ்பிபிக்கு பிடித்த பாடகர்

சுத்தமான சைவ உணவுப் பழக்கம் சாப்பிட எடுத்துக் கொள்கிற நேரம் ஐந்து நிமிடங்கள். இவரது இஷ்ட உணவு தயிர் சாதம். முகமது நபி, ஏசுதாஸ் பாடல்களை விரும்பி கேட்பதோடு இவருக்குப் பிடித்த பாடகர்களும் இவர்கள் தான். எஸ்பிபிக்கு கிரிக்கெட் பிடிக்கும் என்பதால் சச்சின் இவரது ஆர்வத்தைப் பார்த்து விட்டு தன் கையெழுத்திட்ட பேட் பரிசாக அளித்துள்ளார்.

எஸ்பிபி 60 படங்களுக்கு இசை

எஸ்பிபி பிரமாதமாக வரைபவர். மிக நன்றாகப் புல்லாங்குழல் வாசிப்பார். புல்லாங்குழல் இசையை இரவில் இவரது அறையில் கசிவதை கேட்கலாம். முதல் மரியாதை படத்தில் சிவாஜிக்கு பதிலாக நடித்து இருக்க வேண்டியவர். பாரதிராஜா வற்புறுத்தியும் கடைசிநேரத்தில் எஸ்பிபி மறுத்துவிட்டாராம். துடிக்கும் கரங்கள் படத்தில் இருந்து 60 படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்.

மேலும் படிக்க : பாட்டு சிகரம் எஸ்பிபி இறைவனடி சேர்ந்தார்!..

முதன் முதலாக எஸ்பிபி

எல்லா மொழிப் படங்களும் இதில் அடங்கும். பாடலைத் தவிர நடிப்பிலும் அசத்தியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ‘கேளடி கண்மணி’, ‘காதலன்’ இரண்டும் என்றும் நினைவில் மறக்க முடியாதது.

முதன் முதலாக எஸ்பிபி தமிழ் திரைப்படப் பாடலாக பாடியது ‘சாந்தி நிலையம்’ படத்துக்காக ‘இயற்கை எனும் இளைய கன்னி, ஏங்குகிறாள் துணையை எண்ணி’ திரைக்கு முதலில் வந்தது. ‘அடிமைப் பெண்’ படப் பாடலான ‘ஆயிரம் நிலவே வா’!…

மேலும் படிக்க : எஸ்பிபி உடல்நிலை குறித்து பிரபலங்கள் பிரார்த்தனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *