சினிமா

சூரிய பரோட்டா சாப்பிட்டு பார்த்திருப்பீங்க ஒரு காளையோட பார்த்திருக்கீங்களா?

சூரி வெண்ணிலா கபடி குழுவில் பரோட்டாவை அள்ளி தின்னதிலிருந்து பரோட்டா சூரியாக தான் அனைவருக்கும் தெரியும். திரையுலகில் சிவகார்த்திகேயனின் அண்ணன் சூரி.

கொரோனா ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் பாடம். வீட்டில் நேரம் செலவழிக்க முடியாமல் இருக்கும் பல அன்னை தந்தையர்க்கு இந்த காலம் இனிமையாக இருந்தது.

இன்ஸ்டாகிராம்

சென்னையில் சூரி அவருடைய வீட்டில் தன் மகன் மகளுடன் அடிக்கும் அலப்பறையின் காணொளியை எடுத்து தன்னுடைய யூடியூப் சேனலில் வெளியீட தான் அனுபவிக்கும் இனிமையை அனைவரும் கண்டு அனுபவிக்க செய்தார். திரையுலகில் அனைவரையும் சிரிக்க வைக்கும் சூரி தன் வாழ்க்கையிலும் அவ்வாறே வாழ்கிறார்.

சூரியின் மகள் தன்னுடைய தோழி அப்பாவின் ஆட்டோகிராப் கேட்டதாக வந்து சொல்ல அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். சூரி ஒரு நடிகராக இருந்தாலும் தற்போதைய காலகட்டத்தில் மருத்துவர்கள் போலீஸ் அதிகாரிகள் தூய்மைப் பணியாளர்களிடம் ஆட்டோகிராஃப் பெற்று அவர்களை பெருமைப்படுத்தி உள்ளார். சூரி தானே ஒவ்வொருவரையும் அணுகி நன்றி கூறி கையொப்பம் வாங்கி வந்துள்ளார்.

தூங்கா நகரமான மதுரைனு சொன்ன உடனே ஜல்லிக்கட்டு ஞாபகம் வருதா. சூரியன் ஒரு ஜல்லிக்கட்டுக் காளையை வளர்த்தது வராரு. சூரி சென்னையில் இருக்கும் போது தன்னுடைய தம்பி அந்த காளைய பார்த்துப்பாராம். இப்போ சூரிய ஊர்ல இருக்குற சமயத்துல கருப்பன் காளையோட போஸ் கொடுத்து ‘ஊரடங்குக்கு நடுவுல, ஊரே அடங்கி நிற்கும்- எங்க “கருப்பன்” நடந்து போனா’ அப்படின்னா கம்பீரமா சொல்லி இருக்காரு.

சும்மா சொல்லக்கூடாது சூரியும் கருப்பனும் நடந்து வர்றது ரெண்டு காளை நடந்து வரா மாதிரி இருக்குங்க. ஆமால செந்தமிழில் காளை என்ற சொல் ஆணைக் குறிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *