கொரோனா கொடையாளி சோனுசூட்
மாபெரும் மனிதன் கொரோனா கொடையாளி, ஆபத்பாந்தவன், ரட்சகன் நடிகர் சோனு சூட் அவர்கள் ரக்ஷா பந்தனை முன்னிட்டு கொண்டாட்டத்துடன், ஒரு ஏழைப் பெண்ணிற்கு புதிய வீடு கட்டித்தர வாக்குறுதி கொடுத்துள்ளார். இந்தியாவின் மேற்வங்கத்தின் ஜல்பைகுரி என்ற பகுதியில் மழை காரணமாக ஒரு பெண்ணிற்கு வீடு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதற்காக அந்தப் பெண்ணுக்கு வீடு கட்டித்தர வாக்குறுதி கொடுத்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் மழை புரட்டிப் போட்டுள்ளது அப்போது ஒரு குடும்பத்தின் அவல நிலையைப் பற்றி ட்விட்டர் வீடியோ ஒன்றை ஒரு நபர் பதிவிட்டிருந்தார். அந்த நபர் பதிவிட்டு இருந்தபடி அந்தக் குடும்பத்தில் இருந்த பெண் ஜல்பைகுறி பகுதியைச் சேர்ந்தவர். அவருடைய கணவர் உயிருடன் இல்லை என்றும் ஒரு குழந்தையை வைத்து பாதுகாக்க அதற்குத் தேவையான அடிப்படை வசதி செய்து கொடுக்க இயலாத நிலையில் இருப்பதாகவும், அந்த டிவிட்டர் பதிவில் தெரிவித்து இருந்தார்.
மேலும் இந்த மழை அவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விட்டது. ஆகையால் அந்த நபர் டிவிட்டரில் சோனு சூட்டிற்கு நீங்கள்தான் அந்தப் பெண்ணிற்கு ஏதேனும் உதவி செய்ய வேண்டும். முடிந்தால் அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றுங்கள் சோனு சார் என டேக் செய்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
ரக்ஷா பந்தன் நாளில் இந்த உதவிய எனது சகோதரிக்கு செய்வதாகச் செய்கின்றோம் என்று கூறி அவருக்குப் புதிய வீடு கட்டித்தர சோனு சூட் அவர்கள் உறுதியளித்துளார். என்ன மனுசன் சார், இது கடவுள் வாழும் உள்ளமாக இருக்குமோ என்னவோ, ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் ஒரு மோகம் இருக்கும் ஆனால் இந்த மனிதனுக்கு இக்கட்டான சூழலில் இல்லாதவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இயலாதவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று மெனக்கெட்டு வருகின்றார். இவர் உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கும் சிறந்த இந்தியப்பிரஜைகளில் தலைசிறந்தவராக இவரைப் போற்றுவதில் சிலேட்டு குச்சி பெருமைப்படுகிறது.
சோனுசூட் உதவிகள் இந்த இக்கட்டான நேரத்தில் ஆபத்பாந்தவனாக அனைவராலும் அறியப்பட்ட ஒன்றாக இருக்கின்றது. அனைவருக்கும் தேவையான ஒன்றாக இருக்கின்றது. திரையுலகில் அறிமுகமாகி பெரிய நடிகன் ஆகிய இந்தத் தருணத்தில கொரோனா இவரை ஒரு மனிதனாக உலகிற்கு அடையாளம் காட்டுகிறது.
நாம் செய்த பாக்கியம் என்று தான் சொல்ல வேண்டும் இது போன்ற மனிதர்கள் இந்தக் காலத்தில் அபூர்வம் ஆவார்கள். வாழ்க சோனு சூட் வளமுடன் வாழ்க!,, உங்களது உதவிக்கரம் இன்னும் நீளமாக இருக்க வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்.