ஒழுங்கற்ற மாதவிடாய் போக்குவதற்கு செய்ய வேண்டியவை
ஒழுங்கற்ற மாதவிடாய் போக்குவதற்கு செய்ய வேண்டியவை பொதுவாக ஆரோக்கியமான பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு வர வேண்டும். ரத்தசோகை, பருமன், அதீத குளிர்ச்சியான உடல்வாகு, தைராய்டு, சினைப்பை, கருப்பை பிரச்சனைகள்.
இப்படி ஏதேனும் இருப்பதால் அந்த சுழற்சி முறை தவறும். வரும்போது வரட்டும் என்று அலட்சியமாக விடக்கூடிய விஷயமில்லை. இது முறைதவறி வரும் மாதவிலக்கு.
அக அழகு, புற அழகு இரண்டையும் பாதிக்கும். வயதுக்கு வரும் பெண் குழந்தைகளுக்கு உளுந்தங்களி, வெந்தயக் களி, எள்ளுருண்டை போன்றவற்றைக் கொடுக்கும் பழக்கம் கிராமப் புறங்களில் இன்றும் இருந்து வருகின்றது.
பூப்பெய்தும் வயது குறைந்து வருகிற நிலையில், இந்த மாதிரி உணவுகளைக் கொடுப்பதன் மூலம் அவர்களது எலும்பு மண்டலத்தைப் பலப்படுத்த முடியும். நகரங்களில் அந்த கலாச்சாரம் எல்லாம் ஏது என்று கேட்காதீர்கள்.
இதனால் தான் சின்ன வயதில் இருந்து கண்ணாடி போடுவது, வருடத்தின் எல்லா நாள்களிலும் தும்மல், இருமல், சைனஸ், பிரச்னை என நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் பாதிக்கப்படுகிறார்கள்.
வயதுக்கு வந்ததுமே எல்லாப் பெண்களுக்குள்ளும் ஒரு பெரிய மனுஷத்தனம் வந்து உட்கார்ந்து கொள்ளும். உடலின் மீதும், புற அழகின் மீதும் அக்கறை அதிகமாகும். ஒல்லியாக இருப்பது தான் அழகு என்கிற நினைப்பில் உணவை தவிர்ப்பார்கள்.
குறிப்பாக காலை உணவை தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு காலை உணவைத் தவிர்க்கிற பெண்களுக்கு மாதவிலக்கு சுழற்சி முறையற்று போவது. ரத்தசோகை, ஹார்மோன் மாற்றம் ஏற்படும். மூன்றே மாதங்களில் கன்னாபின்னாவென எடை எகிறும்.
மாதக்கணக்காக வராமலிருக்கும் ரத்தப்போக்கை வரவழைக்க ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக் கொள்வது. மாதவிலக்கில் செய்வதுடன் கூடவே சில இம்சைகளையும் இழுத்து விட்டுத்தான் செல்லும். உதட்டுக்கு மேலும் தாடையிலும் முடி வளர்வது. எடை அதிகரிப்பது எல்லாம் ஹார்மோன் மருந்துகளின் கைங்கர்யமே.