ஹெல்த்தின் முதலீடாக மனம் விட்டு சிரிக்கலாமே.!
நமது ஆயுளை அதிகரிக்கச் செய்வதில் சிரிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. கவலைகளை வெளியேற்ற சிரிப்பால் மட்டுமே முடியும். கோபத்தை அதிகளவு வராமல் செய்கிறது. இதயத் துடிப்பை சாதாரண நிலைக்குக் கொண்டு வர மிகப் பெரிய ஆயுதம் சிரிப்பு தான். எத்தகைய சவால்களை எதிர்கொள்ளும் மன உறுதியையும் இது தருகின்றது. சிரிக்கும் நபர்கள் எங்கும் எல்லோரது கவனத்தையும் ஈர்த்து விடுவார்கள்.
எந்த ஒரு நபர்களுடன் யாரும் எளிதில் பழகமாட்டார்கள். சிரிப்பவர்கள் எங்கும் நல்ல உறவுகளை ஏற்படுத்த முடியும். சமூகத்தில் விரைவில் பிரபலமாகி விடுவார்கள். சிறுவயதில் இருக்கும் போதே ஒரு நாளைக்கு 100 முறை சிரித்த நாம் இப்போது சிரிக்கவே தயங்குவது ஏன் என்று தெரியவில்லை. மனம் இறுக்கமாக இருக்கிறது என்றால் காமெடி காட்சியை பார்த்து வயிறு குலுங்க சிரித்தால் கவலைகளுக்கு இடமே இருக்காது.
வயிற்றுக்கு மிகப் பெரிய பயிற்சி
வயிறு குலுங்கச் சிரிப்பது வயிற்றுக்கு மிகப் பெரிய பயிற்சி. நீண்ட சிரிப்பின் மூலம் உடலில் அதிக கலோரி அழிந்து விடும். நீர் சுரந்து உணவை எளிதாக ஜீரணிக்க வைக்கிறது. சிரிக்கும் போது சுரக்கும் என்டார்பின் உடலை நல்ல நிலைக்கு கொண்டு வரும். மன அழுத்தத்தை தரக் கூடிய ஹார்மோன்கள் சுரப்பது குறைக்கப்படுகிறது. சிரிக்கும் போது நம் உடல் தூண்டப்பட்டு ஆன்டிபயாடிக்ஸ் களத்தில் குதித்து கிருமிகளை எதிர்க்கின்றன.
செலவில்லாமல் வரும் சிரிப்பு நம்மை நல்ல மனநிலைக்கு கொண்டு வரும். மனோரீதியாக நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். மூளை சிரிக்க வேண்டும் என்று உடலுக்கு கட்டளை பிறப்பித்த உடன், நம் உடல் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. சிரிப்பு என்பது ஆரோக்கியத்தின் முதலீடாகும். கிருமிகளுக்கு எதிராக இருப்பது இந்த சிரிப்பினால் வரும் பூரிப்பு.
பழமொழிகள் காலாவதியாகிப் போய்விட்டன
மன அழுத்தத்தைக் குறைத்து மனதை இலகுவாக்கியது. உடலில் உள்ள வலியை கூட சிரிப்பு குறைகிறது. வயிறு குலுங்க சிரிக்க ஒரு மணி நேரத்திற்கு உடல் ரிலாக்ஸ் ஆகிவிடும். தசைநார்களின் இறுக்கம் கூட லேசாகும். பல பழமொழிகள் காலாவதியாகிப் போய்விட்ட அதில் ஒன்று தான் வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பது.
சிரிப்பதற்கு கூட நேரம் இல்லாமல் எதையோ தேடிக் கொண்டிருக்கிறோம். சிரிப்புடன் இருப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? தெரிந்து கொண்ட நீங்களாவது இனி சிரிப்பின் அருமையை புரிந்து சிரிக்க கற்றுக்கொள்ளுங்கள். மனம் இறுக்கம் குறையும். மனசு லேசாகும்.