ஸ்மார்ட்போன் பயன்பாடு. செல்போன் நிறுவனங்கள் கூறும் புள்ளி விவரங்கள்
ஸ்மார்ட் போன்களால் உடல்ரீதியான, மனரீதியான பிரச்சனைகள் ஆட்கொள்ள தொடங்கிவிட்டன. கொரோனா காலத்தில் ஊரடங்கு செல்போன் பயன்பாட்டை அதிகரித்து விட்டதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்மார்ட்போன் பயன்பாட்டினால் சந்திக்க வேண்டிய, சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் என்ன? பார்க்கலாம். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு இது செல்போனுக்கும் பொருந்தும்.
- போன்களால் உடல்ரீதியான, மனரீதியான பிரச்சனைகள்
- ஸ்மார்ட்போன் பயன்பாட்டினால் சந்திக்க வேண்டிய, சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் என்ன?
- போன் நம்மை அடக்கி விடக் கூடாது என்பது பலரின் அறிவுரை
பலரின் அறிவுரை
நம் போன் பயன்பாட்டை வைத்துக் கொண்டு நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோமா செல்போன் என்றால் பதில் என்னவாக இருக்கும். போன் நம்மை அடக்கி விடக் கூடாது என்பது பலரின் அறிவுரையாக இருக்கின்றது. செல்போனை ஆஃப் செய்து வைப்பதால் 73 சதவீதம் சந்தோஷ நிலையை உணர்வதாக நம்புகின்றனர். 73 சதவீதம் பேர் செல்போன் இல்லாமல் தவிப்பதாக கூறுகின்றனர்.
புள்ளிவிவரங்கள்
சென்னை, ஹைதராபாத், மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் இந்த புள்ளிவிவரங்கள் எடுக்கப்பட்டன. 74 சதவீதம் பேர் மூட் அவுட் ஆகி விடுவதாகக் கூறுகின்றனர். 70 சதவீத பயனர்கள் மனதளவில் உடலளவில் பிரச்சனையை சந்திப்பதாக கவலை தெரிவிக்கின்றனர். 88 சதவீதம் பயனாளர்கள் எந்த காரணமும் இல்லாமல் செல்போனை உபயோகிப்பதாக கூறுகின்றனர்.
நேரத்தை செலவிட
84 சதவீதம் பேர் காலை எழுந்தது முதல் தூங்கச் செல்வது வரை செல்போனுக்கு உள்ளேயே மூழ்கிகின்றனர். 89 சதவீதம் பேர் பிடித்தமான அவர்களுடன் நேரத்தை செலவிட முடியவில்லை என்று செல்போனை அதிகபட்சம் பயன்படுத்துகின்றனர். செல்போன் இருப்பதன் காரணமாக பிடித்தவர்களுடன் நேரத்தை செலவிட முடிகிறது என்பதை உணர்வதாகவும் கூறுகின்றனர்.
செல்போன் பயன்பாடு
75 சதவீதம் அலுவலக வேலை 63 சதவீதம் மற்றவர்களுடன் பேசுவதற்கு 59 சதவீதம் வீடியோவுக்காக 56 சதவீதம் சோசியல் மீடியா 45 சதவீதம் கேமிங் பயன்பாடு என்ற நிலைதான் செல்போன் பயன்பாட்டை அதிகரிக்க உதவியுள்ளன.