தீபாவளி ஸ்மார்ட் பிளானிங்
தீபாவளி பண்டிகை என்றாலே அதற்கு முன்னதாக வீடுகளில் பட்ஜெட் போட தொடங்கி விடுவோம். வீட்டில் உள்ளவர்களுக்கு என்னென்ன வாங்க வேண்டும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவது முதல் தேவையைக் குறித்து ஷாப்பிங் செய்வோம். தற்போது பொருளாதார சிக்கல் எழுந்துள்ள நிலையில் அதற்கு ஏற்ற வகையில் பட்ஜெட் போட்டுக் கொள்வது நல்லது.
- தீபாவளி பண்டிகை என்றாலே அதற்கு முன்னதாக வீடுகளில் பட்ஜெட் போட தொடங்கி விடுவோம்.
- சமூக இடைவெளியை கடைப்பிடித்து பர்ச்சேஸ் செய்வது அவசியம்.
- பட்டியலிட்டு நேரில் சென்று வாங்குவதால் பாதுகாப்பானதாக இருக்கும்.
- நம்முடைய திட்டம் கொரோனா காலத்தில் மாற்றி அமைப்பது அவசியமாகிறது.
தீபாவளி பட்ஜெட்
நம்முடைய திட்டம் கொரோனா காலத்தில் மாற்றி அமைப்பது அவசியமாகிறது. கொரோனா காலத்தில் உங்கள் ஷாப்பிங் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதில் அதிக முக்கியத்துவம் எடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டை அலங்கரிப்பது வீட்டிற்கு வருபவர்களுக்கு மற்றும் அக்கம் பக்கத்தினர், நண்பர்கள் என்று இனிப்பு வழங்குவதற்கான செலவு, ஆடை செலவு, பட்டாசு, உணவு பொருட்களுக்கு உள்ள செலவு போன்ற செலவுகளுக்கான தொகையை பட்டியலிட்டு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
தீபாவளி திட்டம்
ஒவ்வொரு வருடமும் தீபாவளி போனஸ் தொகை அல்லது சேமிப்பு தொகை முழுவதையும் தீபாவளி ஷாப்பிங் செலவிட்டு மகிழ்வோம். நாம் செலவிடக் கூடிய தொகை கணக்கிட்டு ஒதுக்கிய பிறகு மீதி தொகையில் ஒரு பகுதி குடும்ப அவசர நிதிக்காக ஒதுக்குவது நல்லது. இந்த அவசர நிதி அடுத்த சில நாட்களுக்கு உண்டான பொருளாதார சிக்கலை சரி செய்ய உதவியாக இருக்கும்.
தீபாவளி ஆஃபர்
தீபாவளி ஆஃபர் இருக்கிறது என்பதற்காக கையில் பணம் இருக்கிறது என்று பொருட்களை எல்லாம் வாங்கி குவிப்பதை தவிர்த்து கொள்ளுங்கள். நாம் திட்டமிட்டு பட்டியலிட்ட பொருள் தவிர்த்து, வேற எந்த பொருட்களை வாங்கினாலும் அத்தியாவசிய தேவைதானா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். வாங்கும் போது பணத்தை சேமிக்க முடியும்.
ஆன்லைனில் ஃப்ரீ டெலிவரி
குறிப்பிட்ட தொகைக்கு மேல் ஆடர் செய்வதால் ஆன்லைனில் ஃப்ரீ டெலிவரி சேவை பெற முடிகிறது. வீட்டில் இருப்பவர்களின் தேவையான பொருட்களை பட்டியலிட்டுக் செலவிட பணமும், நேரமும் மிச்சம் ஆகின்றன. தேவையான பொருட்களை வாங்கும் போது விலை சற்று அதிகமாக இருந்தாலும் நல்ல தரமான பிராண்டா என்பதை ஆராய்ந்து வாங்க வேண்டும். மேலும் வாரன்டி இருக்கிறதா என்பதைத் உறுதி செய்து வாங்கலாம்.
தீபாவளி ஆர்டர்
அனைவரும் கடைகளுக்கு செல்லாமல் குடும்பத்தில் ஒருவர் மட்டும் பட்டியலிட்டு நேரில் சென்று வாங்குவதால் பாதுகாப்பானதாக இருக்கும். தீபாவளி பலகாரங்கள் வெளியில் இருந்து பெரும்பாலானவர்கள் வாங்க விரும்பாததால், நண்பர்களுக்கு ஸ்வீட் கொடுப்பதாக இருந்தால் அதை இந்த வருடம் தவிர்த்து விடலாம். நாம் கொடுக்கும் பொருளை வாங்கிக் கொள்வார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு பிறகு ஆர்டர் செய்து வாங்கிக் கொடுக்கலாம்.
தீபாவளி ஷாப்பிங் பர்ச்சேஸ்
ஷாப்பிங் செல்லும் போது தரமான மாஸ்க் மற்றும் சனிடைசர் இதற்கான செலவு முதல் செலவாக இருக்கட்டும். சமூக இடைவெளியை கடைப்பிடித்து பர்ச்சேஸ் செய்வது அவசியம். இல்லையென்றால் ஆன்லைன் ஷாப்பிங் பாதுகாப்பானது. குடும்பத்துக்கு சேர்த்து ஷாப்பிங் செய்யப் போவதாக இருந்தா ஒவ்வொருவரின் ஆடை அளவுகள் குறித்து வைத்துக் கொண்டு செல்வது அவசியம். இதனால் செலவுகள் குறையும். பாதுகாப்பாக இருக்கும்.
விலை மலிவாக இருக்கிறது என்பதற்காக கூட்டத்திற்குள் அடித்து பிடித்துக் கொண்டு ஷாப்பிங் செய்ததை தவிர்த்துக் கொள்ளுங்கள். கடைசியாக வாங்கிக் கொள்ளலாம் என்று காத்திருக்காமல் முன்னதாகவே சென்று வாங்கிக் கொள்ளலாம்.