சினிமா

கலியுகத்தில் காட்சியளித்த திரௌபதி

திரௌபதி பாஞ்சாலத்தின் மகள், அவள் பாரதத்தின் தவப்புதழ்வியாய்  இருந்தாள். மகா காவியத்தின் தர்ம தேவதையாக இருந்தாள். பலிகளையும் பாவங்களையும் சுமந்தாள்,  வலிகளையும் வேதனைகளையும் உடமையாக கொண்டு வாழ்ந்தாள்.  இறுதியில் உண்மையை நிலைநாட்டி உரிமையை பெற்றாள்.  இது மகாபாரதம் திரௌபதி ஆகும்.  ஆனால் சமீபத்தில் ஒரு காட்சி அது மண்ணையும் அதில் மறைந்து போன பல மதிப்புமிக்க வாழ்வியலையும் மீட்டுத் தந்தது.  கோவித் நேரத்தில் தமிழகத்தில் வெற்றிகரமான ஒரு பதிவஒ கொடுத்த திரௌபதியை பார்க்கத்தவறாதீர்கள்.

 ஆம் அந்த படம் பற்றி முழுமையாக எனக்கு தெரியவில்லை ஆனால் ஆறு நிமிட காட்சியில் அந்த கதையை எண்ணால் மனதுக்குள் காணமுடிந்தது. கோவித் கொலை வெறியில் இருந்த பொழுது , பொழுது போக்க சில சினிமா காட்சிகளை பார்த்து வந்தேன் அப்படித்தான் திரௌபதி காட்சிகள் பார்த்தேன். திரௌபதி என்ற பெயரில் வெளிவந்த நமக்கு ஒரு பாடமாக அமைந்த அந்த கதை களம் ஒரு ஆறு நிமிட காட்சிகள் சாட்சியமாக நின்று சாட்டையால் அடிக்கச் செய்து நமது   டெய்லி லைப்ஸ்டைலை சாடியது. நாம்  எப்படி வாழ வேண்டும் என்பதையும் திரவுபதி கதை மூலம் அறிய முடிந்தது. 

 ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு திரௌபதி இருப்பாள் அவள் வெளிவரும்போது தான் அவளின் சொரூபம் தெரியும்.  ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு கட்டத்தில் தர்மத்திற்காக துணை நிற்பார்கள். இந்த கதைகள் தர்மமாக அமைந்த வாழ்வியலை கருவாக கொண்டு வாழ்வே சேவை செய்யும் முறையாக மாற்றிய ஒரு பெண்ணின் ஆக்கபூர்வமான செயல்தான் இந்த திரவுபதி கதை ஆகும்.  அது சரி அப்படி என்ன ஆறு நிமிடம் பார்த்தேன், என்று கேட்கிறீர்களா,  ஆமாங்க,  நான் பார்த்தது என்னவோ  ஆறு நிமிஷம் தான் அதுல நம்ம முப்பாட்டன் முன்னோர்கள் அனைவரும் காலம் காலமாக கட்டிக்காத்து வரும் வாழ்வியலை கதையாக காணமுடிந்தது. 

 மரம் வளர்ப்பு அதன் நன்மைகள்,  சானிட்டரி நாப்கின் சிக்கல், தண்ணீர் கேன் விற்பதில் இருக்கும் ஊழல், சுதேசி கிராமம் அங்கு ஒற்றுமையுடன்  வாழும் மக்கள், அன்பும் ஆரோக்கியமான புரிதல்மிக்க காதல் கொண்ட தம்பதியினர் என எட்டுத்திக்கும் ஒரு வலிமை அந்த காட்சிகளுக்குள்  தென்பட்டது. உண்மைகள் காட்சியாக வைக்கப்பட்டு இருந்தது. இந்த  காட்சிகள் அத முழுக்கதையையும் காண ஆவலை தூண்டியுள்ளது. இது கோவித் காலம்  இருந்தும், திரௌபதியை நோக்கி என் தேடல் பயணிக்கின்றது. திரௌபதி எனும் பெயரில் நன்மைகள் பொதிந்துள்ளது. ஒவ்வொரு வாழ்வியலிலும்  திரௌபதி போன்ற மனிதம் சார்ந்த மாண்புகள் நமக்கு பொக்கிஷமாக கிடைக்கின்றன. 

 இந்த கதையும் அதுவாகத்தான் இருக்க வேண்டும் நிச்சயம் நம்மால் அங்கீகரிக்கப்பட்ட படங்களில் ஒன்றாக திரௌபதி இருக்கின்றது. எத்தனையோ கதைகளுக்கு அங்கீகாரம் கொடுத்த தமிழ் மக்கள் இன்று இந்த திரௌபதியையும் அங்கீகரித்துள்ளார்கள். வெகுவிரைவில் முழு கதையையும் பார்த்து விமர்சனத்தை தொடங்குகின்றேன் . 

ஆறு நிமிடம் அதிர்வலைகள் கொண்ட திரௌபதி:

திரௌபதி படத்தில் வரும் அந்த ஆறு நிமிட காட்சிகள் கார்ப்பரேட்டுகளின் கைவரிசை அதன் கட்டுக்கடங்காத ஒரு கம்பீரம் கிராமத்தின் இயற்கை வாழ்க்கை முறை மக்களின் ஒற்றுமை ஒன்றாக எதிர்த்துப் போராடுதல் ஆகிய அனைத்தும் திறம்பட காட்டப்பட்டிருந்தது ஒற்றுமை, பாதுகாப்பு, ஆரோக்கியம் வாழ்வியலுக்கு அவசியமானது என்பதை இது தெரிவிக்கின்றது. இதன்மூலம் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற உணர்வு இன்னும் அதிகரித்துள்ளது.

நிச்சயம் இதற்காக ஒரு நேரம் ஒதுக்கி பார்த்துவிட்டு விமர்சனத்தை முன் வைக்கின்றேன். ஆனால் முதல் காட்சியில் எனக்கு முழு கதையும்  சொல்லிவிட்டது ஆனால் முழுதாக பார்த்த பின் பகுதியில் இருக்கும் அம்சத்தை அறிவோம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *