செய்திகள்தமிழகம்

தீயாய் பரவும் கொரானா

தீயாய் பரவும் கொரானா திரும்பவும் மக்கள் பீதி, தமிழகத்தில் கட்டுக்கடங்காத வேகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது கோவித்-19 தோற்று வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுள்ளது.

 சென்னையை அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் பெருவாரியாக கோவித் தொற்று பாதிப்புஅதிகரிப்பு தொடங்கிய வண்ணம் இருக்கின்றது. சென்னையில் மட்டும் மொத்தம் 7 ஆயிரத்து 677 பேர் குரானா பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். சென்னையில் இன்று மட்டும் 5 57 பேருக்குமேல் கொரானா பாதிப்புக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளனர்.

செங்கல்பட்டில் மட்டும் கோவித் 61 பேருக்கு உறுதியாகியுள்ளது. மொத்தம் தமிழ்நாட்டில் இன்று மட்டும் 743 பேர் கோபித்து வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் மட்டும் 13 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கோவித் வைரஸால் பெருமளவு பாதிப்பு சந்தித்து வருகின்றனர்.

 சென்னையில் மட்டும் இதுவரை 8 ஆயிரத்து 228 ஆக கோவித் தாக்கப்பட்டவர்கள் இருக்கின்றனர். சென்னை எடுத்து கடலூரில் 470 பேருக்கு கோவித் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது விழுப்புரத்தில் 318 பேருக்கு என்ற உறுதியாக உள்ளது. திருவள்ளூரில் 694 பேர் கோவித் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இவ்வாறு மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கோவித் பாதிப்புகள் ஆங்காங்கே பெருகிய வண்ணம் உள்ளது. கோவித் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நோய் எதிர்ப்புச் சக்தி என்பது மிகவும் அவசியமாகின்றது. அதனை அரசும் பல்வேறு மருத்துவர்களும் நமக்குப் பரிந்துரைத்து வருகின்றனர். அதுமட்டுமல்ல கைகளை உடனுக்குடன் கழுவுவது, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது, மாஸ்க் அணிந்து வெளியில் செல்வது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற முக்கியமான நோய் தடுப்பு நடவடிக்கைகளை அரசு ஊரடங்கு காலம் முதல் அறிவித்து வருகின்றது. 

 மக்கள் கூட்டமாக இருப்பதை தவிர்க்க வேண்டும் ஆனால் கடந்த சில நாட்களில் தமிழகத்தில் சில பகுதிகளில் அது முழுமையாக பின்பற்றப்படவில்லை என்ற கருத்தும் பொது மக்களிடையே பரவலாக உள்ளது அரசுதான், என்ன செய்யும் அல்லது காவல்துறை தான் என்ன செய்யும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தனிமனித இடைவெளி என்பது அவசியமாகின்றது. இல்லையெனில் இந்த தொற்று பாதிப்புகள் அனைத்தும் வரும் காலங்களில் அதிகமாக இருந்து தப்பிக்க உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மன உறுதியோடு கோவிந்த எதிர்கொள்வது என்பது சிறப்பான நடவடிக்கையாகும்.

 பெரும்பாலும் உடல் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களும் மன உறுதி குறைவானவர்கள் மற்ற நோய் தாக்குதல் உள்ளவர்களை மரணத்தை சந்திக்க செய்துள்ளது ஆனால் அதிகபட்சமாக நோய் எதிர்ப்பாற்றல் உள்ளவர்களுக்கு கோழி தாக்குதல் என்பது பெரிய அளவில் பாதிப்பை உண்டு செய்யாது முறையான உணவுப் பழக்கம் பாதுகாப்பான வாழ்க்கை முறை நல்ல உடற்பயிற்சி என்பது மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படும் ஒன்றாகும் அதனைப் பின்பற்றி வாழ்வை காப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *