சினிமா

பாவமான புல்லட் திகிலான ஷ்ரத்தா ஸ்ரீநாத்

ஷ்ரத்தா ஸ்ரீநாத் இவன் தந்திரன் படம் மூலமாகத் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி காற்று வெளியிடை படத்தில் நடித்து விக்ரம் வேதா, நேர்கொண்டபார்வை, கே-13 போன்ற படங்களால் திரையுலகில் தடம் பதித்தார். நல்ல போல்டான கதாநாயகியாக மக்கள் மனதை கைப்பற்றியுள்ளார்.

கன்னடத்தில் யூடேன் என்னும் படம் மூலமாக அந்தத் திரை உலகில் பிரபலமானார். நேர்கொண்ட பார்வை படத்தில்ல் இவரின் கதாபாத்திரம் பெரிதாகப் பேசப்பட்டது. கன்னடா தமிழ் மலையாளம் இந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்து வருகிறார்.

பழைய நினைவுகளை புதுப்பிக்கும் வகையில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இவரது வீடியோ என்ன என்று தெரியுமா?

இன்ஸ்டாகிராம்

ஷ்ரத்தா ஸ்ரீநாத் புல்லட் ஓட்டும் வீடியோவை பதிவிட்டு அந்த நிகழ்வுக்கு பின்னால் இருக்கும் கதையையும் கூறியுள்ளார்.

“ஒரு பைக் ஓட்டும் காட்சி கூட இல்லை என்றால் இந்திய சினிமாவில் நீங்கள் ஒரு போல்டான பெண் கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஏற்றுக்கொள்ள முடியுமா?” என்று புன்னகைத்த வேலையை தொடர்கிறார்.

“இது ஜூன் 2017. நாங்கள் நந்தி ஹில்ஸ் இடத்தில் ஷூட்டிங் செய்து கொண்டிருந்தோம். அன்று மழை பெய்து மேகமூட்டத்துடன் இருந்தது. சாலைகளும் மிகவும் ஈரமாகவே இருந்தன. இயக்குனர் ரவிகாந்த் என்னிடம் கேஷுவலாக வந்து ‘உங்களுக்கு பைக் ஓட்டத் தெரியுமா?’ என கேட்டார். ‘இல்லை’ என அவருக்கு நேரடியாக பதில் கூறினேன்.

அதற்கு பிறகு நான் கற்றுக் கொள்கிறேன் எனக் கூறி அங்கிருந்த பைக்கை ஓட்டுவதற்காக எடுத்தேன். கியரை எப்படி மாற்ற வேண்டும் என்பது மட்டுமே எனக்கு தெரிந்திருந்தது. மேலும் நான் எட்டு வயது இருக்கும் போது ஒரு டூவீலர் எப்படி பேலன்ஸ் செய்ய வேண்டுமென கற்று இருந்தேன்.

இதுதான் நான் முதன் முறையாக பைக் ஓட்டியது. அது மிகவும் கடினமாக இருக்கும் என எனக்குத் தோன்றவில்லை. அப்போது தான் இது நடந்தது. என்னுடைய அசிஸ்டன்ட் பிரசாந்த் தான் வீடியோவை எடுத்துக் கொண்டிருந்தார்.

தவறான வார்த்தைகள் அதில் இருந்தால் கண்டு கொள்ளாதீர்கள். அனைவரும் நான் கீழே விழுந்ததும் உதவி செய்ய ஓடி வந்தார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் பைக் ஸ்கிராட்ச் ஆவது பற்றித்தான் அதிகம் கவலைப் பட்டிருப்பார்கள். ராயல் என்ஃபீல்டு பைக்குகள் ஏன் அதிகம் கனமாக இருக்கின்றன?”

இப்படி செமையான எக்ஸ்பீரியன்ஸ் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்காங்க நம்ம ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவங்களோட இந்த செயலால் எல்லாரோட முதல் வண்டி ஓட்டும் அனுபவம் நினைவுக்கு வருகிறது.

‘அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே…’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *