ஆன்மிகம்ஆலோசனை

சிவபுராண உபன்யாசம் வீட்டிலேயே கண்விழித்து பூஜைகள் செய்து வழிபட..!!

சிவராத்திரி 12.6.20 இன்று ஆனி மாதத்தில் வருகின்றது. சிவராத்திரி அன்று கண் விழிக்க வேண்டும் என்பதற்காக தாயக்கட்டம் ஆடுவதை, திரைப்படங்கள் பார்ப்பது தவறான செயல். தேவாரம், திருவாசகம், சிவபுராணம் சிவ தோத்திரங்கள் முதலானவற்றை படித்து அல்லது யாராவது படிக்கச் சொல்லி கேட்பது மிகவும் நல்லது.

சிவராத்திரி அன்று இரவு முழுவதும் சிவபுராண உபன்யாசம் ஒரு சில கோவில்களில் நடைபெறுகிறது அதை கேட்கலாம். அமைதியாக சிவ மந்திரங்களை சொல்லி தியானிக்கலாம். இன்றைய காலகட்டத்தில் கோவிலுக்கு செல்ல முடியாத காரணத்தால் வீட்டிலேயே கண்விழித்து பூஜைகள் செய்து வழிபடலாம்.

பொதுவாக சிவராத்திரி 4 கால ஜாமம் பூஜை நடைபெறும்.

முதல் ஜாமம் மாலை 6 முதல் 9 மணி வரையும்

இரண்டாம் ஜாமம் இரவு 9 மணி முதல் 12 மணி வரையும்

மூன்றாம் ஜாமத்தில் இரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரையும்

நான்காம் சாமம் ஜாமத்தில் அதிகாலை 3 முதல் 6 மணி வரையும் பூஜிக்கப்பட்டு வருகிறது.

கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே இந்த நேரத்தை பயன்படுத்தி பூஜை செய்யலாம்.

முதல் ஜாமம்

முதல் ஜாமத்தில் பசும்பால், தயிர், நெய், பசுவின் சிறுநீர், பஞ்ச் சாணம் இந்த ஐந்தும் கலந்தது பஞ்சகவ்யம். இந்த பஞ்சகவ்யத்தால் அபிஷேகம் செய்து, தாமரை பூக்கள், வில்வம் அர்ச்சனை செய்து, பயித்தம் பருப்பு கலந்த பொங்கல் நைவேத்தியம் செய்து ரிக் வேதத்தைப் பாராயணம் செய்ய வேண்டும்.

இரண்டாம் ஜாமம்

இரண்டாம் ஜாமம் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து, தாமரை,தேன், சர்க்கரை, தயிர், நெய் ஆகிய ஐந்தும் கலந்து பஞ்சாமிர்தம். இதழ்களை விட்டு வாழைப்பழத்தை சேர்த்து விட்டு, சந்தனம் தாமரைப் பூவைச் சாற்ற வேண்டும். துளசியால் அர்ச்சனை செய்து, பாயாசம் நைவேத்தியம் செய்து, யஜுர் வேத பாராயணம் செய்யலாம்.

மூன்றாம் ஜாமம்

மூன்றாம் ஜாமத்தில் தேன் அபிஷேகம் செய்து, பச்சை கற்பூரம், ஜாதி முல்லை மலர் சாற்ற வேண்டும். மூன்று நிலைகள் கொண்ட வில்வத்தால் அர்ச்சனை செய்து, எள் சாதம் நைவேத்யம் செய்து சாமவேதம் பாராயணம் செய்யலாம்.

நான்காம் ஜாமம்

நான்காம் ஜாமத்தில் கரும்புச் சாறு அபிஷேகம் செய்து, அரைத்த குங்குமப்பூவுடன், நந்தியாவட்டை மலர் சாற்ற வேண்டும். நீலோத்பல மலரால் அர்ச்சனை செய்து, சுத்தமான அன்னத்தை வெள்ளை சாதத்தை நைவேத்தியம் செய்து, அதர்வண வேதம் பாராயணம் செய்ய வேண்டும்.

இவ்வாறு வீட்டிலேயே எளிமையாக பூஜை சொல்லலாம். மறுநாள் அதிகாலை அனுஷ்டானங்களுடன் உச்சிக்கால பூஜை அனைத்தையும் முடித்து விட்டு, நமக்கு உபதேசம் செய்த தீட்சை குருவை வணங்கி ஆசிபெற்று, ஒரு சில ஏழைகளுக்கு உணவளித்த அதன் பின் நாம் உண்ண வேண்டும். இவ்வளவையும் சூரியன் உதித்து இரண்டரை மணி நேரத்தில் செய்து முடிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *