செய்திகள்தமிழகம்

எஸ்.இ.டி.சி பேருந்துகளுக்கு முன் பதிவு துவக்கம்

தமிழகத்தில் வெளிமாவட்ட போக்குவரத்து வரும் திங்கட்கிழமை துவங்க இருக்கும் நிலையில் இன்று முன்பதிவு துவங்கியது.

எஸ்.இ.டி.சி என்று சொல்லப்படும் தமிழகத்து பேருந்து சேவை வரும் திங்கட்கிழமை 7 செப்டம்பர் 2020 மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்தை கட்டுப்பாடுடன் துவங்க அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று 4 செப்டம்பர் 2020 மதியம் ஒரு மணி அளவில் முன்பதிவுகள் துவங்கியது.

தமிழகத்திலிருந்து பக்கத்து மாநிலங்களான கேரளா கர்நாடகா ஆந்திரா போன்ற இடங்களுக்கு செல்ல தற்போது வரை போக்குவரத்து சேவை இல்லை. அதனைப் பற்றி அரசு எந்தவிதமான செய்தியை வெளியிடவில்லை. ஊரடங்கு தளர்வில் பேருந்து சேவை தமிழகத்தினுள் மாவட்டங்களுக்கிடையே பயணிக்க மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

பல மக்களுக்கு வேலை புரியும் மாவட்டம் ஒன்றாக இருக்க சொந்த ஊர் ஒன்றாக இருக்கிறது. இந்த கொடுமையான சூழலில் ஊரடங்கு ஏற்படுவதற்கு முன்பாகவும் ஏற்பட்ட பின்பும் பலர் வேலைக்குரிய மாவட்டங்களை விடுத்து அவரவர் தமது சொந்த ஊருக்கு இடம் பெயர்ந்துள்ளனர். ஊரடங்கு அறிவித்த சமயத்தில் பல பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசலை பார்த்தே இவை புரிந்திருக்கும்.

இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் தற்போது ஊரடங்கு தளர்வு ஏற்பட்டு அலுவலகங்கள் செயல்படத் துவங்கிய நிலையில் வேலை புரியும் மாவட்டங்களுக்கு திரும்புவது இயல்பே. அதேபோல் தற்போதும் கூட்ட நெரிசலை ஏற்படுத்துவது மூடத்தனம் என்பதை அனைவருமே புரிந்து கொண்டுள்ளனர். இருப்பினும் சென்னை மாநகரத்தில் இயங்கும் பொதுப்போக்குவரத்து பேருந்துகளில் கூட்டம் இருப்பதை எவ்வாறு சரிபடுத்துவது! மக்களே நாம் நினைத்தால் மட்டுமே முடியும்.

போக்குவரத்து விதிமுறைகள்

50 சதவீதம் மட்டுமே இயங்குகிறது. மொத்தமாக 1082 பேருந்துகள் எஸ்.இ.டி.சி இருக்க அதில் 524 மட்டுமே இயங்க உள்ளது. அதிலும் ஒவ்வொரு பேருந்திலும் 50 சதவீதம் மட்டுமே பயணச் சீட்டுகள் விற்பனைக்கு உள்ளது. 26 இருக்கைகள் மட்டுமே நிரப்பப்படுகிறது. பின்பு தேவைக்கு ஏற்ப 50லிருந்து 60 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் பேருந்து துறையினர் அறிவித்துள்ளனர்.

பயணிகள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். பேருந்து ஏறும் பொழுது சனிடைசர் வழங்கப்படும். பயணத்திற்காக பேருந்து ஏறும் முன் கைகளை சுத்தம் செய்து கொள்வது அவசியம். பயணிகளுக்கு நடுவே சமூக இடைவேளை நினைவில் வைத்துக் கொண்டு பொறுமையாக பயணிக்கவும்.

நடத்துனர் மற்றும் ஓட்டுநருக்கு பயணத்திற்கு முன் வெப்பமானியில் அவரவரின் வெப்பநிலையை பரிசோதித்த பிறகே பணிக்கு அனுமதிக்கப்படுகின்றனர். சற்று அதிகமாக வெப்பநிலை இருந்தால் பணிக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

முக்கியமான விஷயமாக இன்று மதியம் ஒரு மணிக்கு துவங்கிய முன்பதிவில் பதிவிடவில்லை என்றாலும் பயணிக்க முடியும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. மக்களே பயணிக்கும் அவசியம் இருப்பவர்கள் மட்டுமே பயணத்தை கவனத்துடனும் தகுந்த கட்டுப்பாட்டுடனும் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *