ஊ,, ஆ,, தெரிந்தால் உங்களை உரச தயங்கும் உலகம்
பெண்கள் பாதுகாப்பிற்காக ஆண்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன என்பதை பற்றி போன பதிவில் பார்த்தோம். இனி வரும் காலங்களில் பெண்கள் தங்களை எப்படி பாதுகாத்து கொள்ள வேண்டும். இது போன்ற பல பயனுள்ள தகவல்களை உங்களுக்காக பதிவு செய்கிறேன். இந்த பதிவில் உங்களை யாரவது தாக்க பட்டால் நீங்கள் என்ன செய்விங்க என்பதை பற்றியும், தற்காப்பு பற்றியும் தொடர்ந்து பார்க்கலாம்.
கூச்சல் போடுங்கள்:
உங்களை யாரேனும் திடீரென தாக்குனா என்ன செய்விங்க? நீங்க திருப்பி தாக்குவீங்களா இல்லனா தடுக்க முயற்சி செய்விங்களா? தப்பித்து ஓடுவீங்களா? திருப்பி தாக்கு வீங்கன்னா நீங்க தான் முடிவு செய்யணும் இல்லையா? யாராவது உங்கள தாக்க வரும் போது உதவி செய்ங்கனு கூச்சல் போட்டு கூப்பிடும் போது, உங்களை தாக்க வருபவரை அச்சுறுத்த கூடும்.
உங்களை தாக்க வருபவரிடம் இருந்து உங்களை தற்காத்து கொள்ள உங்களுக்கு முழு உரிமை உள்ளது. அதனால் உங்களிடம் கைவசம் என்ன பொருள் உள்ளதோ அதை வைத்து நீங்கள் தடுத்து உங்களை தற்காத்து கொள்ளலாம். சாவி கொத்து, குடை, ஸ்ப்ரே கொண்டு எந்தளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு எதிராளியை தாக்கி உங்களை தற்காத்து கொள்ளலாம்.
தாக்குதல்கள், கற்பழிப்புகள் போன்ற இழிசெயல்களை உங்களுக்கு தெரியாதவர்கள் அல்லது தெரிந்தவர்கள் என எவர் செய்தாலும் அவை மிக கடுமையான குற்றங்கள் ஆகும். இது குறித்த தகவலை காவல் துறைக்கு நேரடியாக புகார் கொடுங்கள். தாக்குதல் / கற்பழிப்பு செய்த குற்றவாளியை உங்களுடைய உதவி காவல்துறைக்கு தேவை. உங்களை தற்காத்துக் கொள்ள புரூஸ்லீ போல உங்களைப் பாதுக்கொள்ள அவருடைய நாலுப் படங்கள் பாருங்கள் 40 ஆக்ஷன் படம் கற்றுக்கொடுப்பதைப் போல் கற்றுக் கொடுக்கும். என்னடா இதுக்கெல்லாம் நாம் சினிமா பாக்கனுமான்னா நிச்சயம் இதுக்கு அடிப்படையா ஒரு தீபொறி வரவே நம்ம தலைவர் புரூஸ்லீ அசைவுகள் நமக்கு பாடமாகத் தேவை.
பெண்கள் அடிப்படையாக தங்களை தற்காத்துக்கொள்ள அடிப்படை தற்காப்பு கலைகளாவது கற்றுக் கொண்டு அதனைப் பயிற்சியிலேயே வைக்க வேண்டும். இது இன்றைய இந்தியாவில் அவசியமாகின்றது.
இந்த வகைகளில் நீங்களும் காவல்துறைக்கு உதவுங்க. சம்பவம் பார்த்த சாட்சிகளின் பெயர், விலாசத்தை தெரிய படுத்துங்க. சம்பவத்தில் வாகனம் ஏதேனும் தாக்குதல் நடத்தியவரால் பயன்படுத்த பட்டிருந்தால் அதன் நிறம், மாடல் பதிவு எண் நியாபக படுத்தி தெரியப்படுத்துங்க. தாக்குதல் நடத்திய நபர் எப்படி இருப்பார் என்ற விவரங்களை தெரிவிங்க.
நீங்கள் காவல் துறைக்கு புகார் அளிக்க நேரில் போக முடியாவிட்டலும், வீட்டில் இருந்த படியே உங்கள் தொலைபேசியில் விவரங்களை கூறலாம். பாலின வித்தியாசம் பாராமல் இத்தகைய குற்ற செயல்களால் பாதிக்க பட்ட நபரை கருணையோடு அணுகுவார்கள்.
தாக்குதல், கற்பழிப்பு சம்பவத்தால் பாதிக்க பட்ட ஒரு நபர் உடனடியாக தங்களை சுத்தப்படுத்தி கொள்ள தான் முற்படுவார்கள். எனினும் உடனே அவ்வாறு செய்வதை தவிர்த்தால் அது உதவியாக இருக்கும். இதனால் மருத்துவ ரீதியான சாட்சியங்கள் அழிந்து விடும். அவை இருக்கும் பட்சத்தில் உங்களை உங்களை தாக்கிய/ கற்பழித்த நபருக்கு எதிராக அத்தகைய சாட்சியங்களை கொண்டு குற்ற சம்பவங்களை எளிதில் நிரூபிக்க இயலும்.