ஆரோக்கியம்சமையல் குறிப்புமருத்துவம்வாழ்க்கை முறை

கர்ப்பப்பைக்கு ஆரோக்கியமான பூ

பெண்களுக்கு கர்ப்பப்பைக்கு அவசியமான ஆரோக்கியம் தரக் கூடியது வாழைப்பூ. மாதம் இரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். வாழைப்பூ பலவிதமாக சமைத்து உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். எல்லாக் காலங்களிலும் கிடைக்கும். இந்த கடையில் இருந்து வாங்கி வந்து இரண்டு நாட்களில் சமைத்து சாப்பிட வேண்டும். மூன்று நாட்கள் வரை வைக்க வேண்டாம்.

  • கர்ப்பப்பைக்கு அவசியமான ஆரோக்கியம் தரக் கூடிய வாழைப்பூ.
  • மாதம் இரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
  • எல்லாக் காலங்களிலும் கிடைக்கும்.

வாழைப்பூ கூட்டு

தேவையான பொருட்கள்

வாழைப்பூ 1, உருளைக்கிழங்கு 2, துவரம் பருப்பு 100 கிராம், இஞ்சி இரண்டு துண்டு, பூண்டு ஐந்து பல், மிளகாய்தூள் ஒரு ஸ்பூன், பெரிய வெங்காயம் 2, எண்ணெய், கடுகு, உப்பு, தண்ணீர் தேவையான அளவு. கறிவேப்பிலை சிறிது.

செய்முறை விளக்கம்

வாழைப்பூ வெட்டியதும், உருளைக்கிழங்கு, துவரம்பருப்பு ஆகிய மூன்றையும் தனித்தனியே வேக வைத்து எடுத்து வைக்கவும். மசித்த உருளைக்கிழங்கு, துவரம்பருப்புடன் வாழைப்பூவை சேர்த்து உப்பு போட்டு மூன்றையும் நன்றாக கலந்து விடவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு தாளித்து வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். மிளகுத்தூள், உப்பு தேவைக்கு ஏற்ப கலந்து நன்றாக வதங்கியதும், கறிவேப்பிலை போட்டு தாளித்து காயுடன் சேர்த்துக் கிளறவும். சுடச்சுட வாழைப்பூ கூட்டு இது. சாதம், சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *