சமையல் குறிப்புவாழ்க்கை முறை

பார்த்தாலே ருசிக்க தோன்றும் ஊறுகாய்கள்..!!

நம் வீட்டில் விதவிதமான ஊறுகாய் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் ஊறுகாயை எடுத்துக் கொள்வதும் மிகவும் நல்லது. கேரட் துருவல் ஊறுகாய், பச்சை மிளகாய் ஊறுகாய், பச்சை மிளகு ஊறுகாய் எப்படி செய்யலாம் வாங்க பார்க்கலாம்.

கேரட் ஊறுகாய்

தேவையான பொருட்கள் : கேரட் கால் கிலோ, பச்சை மிளகாய் 10, கடுகு ஒரு தேக்கரண்டி, எண்ணெய் 50 மில்லி, எலுமிச்சை பழம் 5, பெருங்காயம் சிறிது, மஞ்சள் பொடி அரை ஸ்பூன், உப்பு தேவைக்கு ஏற்ப.

செய்முறை : கேரட்டை தேங்காய் துருவல் தட்டில் துருவி வையுங்கள் அல்லது பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சுத்தமான பாத்திரத்தில் போடுங்கள். பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி போட்டு, எலுமிச்சை பழங்களை சாறு பிழிந்து எடுங்கள், மஞ்சள் பொடி, உப்பு போடவும். கடுகு பெருங்காயத் தூள் தாளித்து கொட்டி, நன்றாக கிளறி விடவும். இந்த ஊறுகாய் ஒரு நாள் மேல் வைத்திருந்தால் கூட நன்றாக இருக்கும்.

பச்சை மிளகாய் ஊறுகாய்

தேவையான பொருட்கள் : பச்சை மிளகாய் 100 கிராம், உப்பு தேவைக்கு ஏற்ப. இஞ்சி பத்து கிராம், எண்ணெய் 50 மில்லி, மஞ்சள் பொடி ஒரு ஸ்பூன், கடுகு ஒரு ஸ்பூன்.

செய்முறை : புளி, உப்பு இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு ஊற வைத்து விடுங்கள். மிளகாய் காம்பு நீக்கி இரண்டாய் பிளந்து கொள்ளவும். இஞ்சியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைக்கவும். எண்ணை காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தைப் போட்டு, கடுகு வெடித்ததும் மிளகாய், இஞ்சி இரண்டையும் போட்டு வதக்க வேண்டும். ஓரளவு வதங்கியதும் புளியை கெட்டியாக கரைத்து அதில் விடவும். நீர் பாதியாக சுண்டியதும், எடுத்து வைத்து பத்திரப் படுத்தவும். இந்த ஊறுகாய் மூன்று நாட்கள் கெடாமல் இருக்கும்.

பச்சை மிளகு ஊறுகாய்

தேவையான பொருட்கள் : பச்சை மிளகு கால் கிலோ, எலுமிச்சைபழம் 5, உப்பு தேவைக்கு ஏற்ப. பெருங்காயம் கால் ஸ்பூன், எண்ணெய் 50 மில்லி, கடுகு ஒரு ஸ்பூன், மஞ்சள் பொடி அரை ஸ்பூன்.

செய்முறை : பச்சை மிளகு சுத்தம் செய்த காம்பு நீக்கி, சுத்தமான ஜாடியில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். மஞ்சள் பொடி உப்பு எலுமிச்சை பழ சாறு பிழிந்து விடுங்கள். இவற்றை கலந்து கடுகு பெருங்காயத்தூள் தாளித்துக் கொட்டி ஒரு நாள் மூடி வையுங்கள். பிறகு உபயோகிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *