காமெடி டிராக்கில் களமிறங்கும் சந்தானம்!
காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார் சந்தானம். நடிகர் சந்தானம் தனது காமெடி மற்றும் கவுண்டர் டயலாக்கினால் அதிக ரசிகர்களைப் பெற்றார். இதனை அடுத்து அவர் ஹீரோவாக நடிக்க அதிக ஆர்வமுடன் செயல்பட்டார். தனது சொந்த தயாரிப்பிலும் அவர் நடித்தார் ஆனால் படங்கள் எதிர்பார்த்த இடத்தைப் பெறவில்லை.
இப்போது மீண்டும் காமெடி நடிகராகவும் நடிக்க தயாராகி வருகின்றார் சந்தானம். தனது சொந்த தயாரிப்பு தயாரித்த படங்கள் அனைத்தும் வெற்றியை பெறவில்லை. அது சந்தானத்திற்கு பொருளாதார அளவில் பாதிப்பை உண்டாக்கியது. இதன் காரணமாக நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என்ற முடிவிலிருந்து பின் வாங்கி மீண்டும் காமெடி நடிகராக நடிக்க சந்தானம் களமிறங்கியுள்ளார்.

காமெடி கதாபாத்திரங்களில் நடிக்க அவர் இயக்கிய 62 படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகின்றது. மேலும் அரண்மனை 4 படத்திலும் இவர் நடிக்க இருக்கின்றார். சந்தானம் இனிவரும் அடுத்தடுத்த படங்களில் தனது காமெடி கதாபாத்திரத்தை தக்கவைத்துக் கொள்ள களமிறங்கி இருக்கின்றார் என்பது மட்டும் சமீப கால தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தானத்தின் ஹீரோ ஐந்து படங்களில் நடித்தும் எந்த ஒரு ரிசல்ட்டும் இல்லை. அதனா. தவித்து வருகின்றார் தற்போது அவர் உஷாராகி விட்டார் என்றே தெரிகின்றது. எப்படியோ நல்லபடியாக பிழைத்துக் கொண்டால் சரிதான்
மேலும் படிக்க : வாழு வாழ விடு; காஜல் அகர்வால் அட்வைஸ்