ஆன்மிகம்ஆலோசனை

பிள்ளையாருக்காக இந்த ஒரு விரதத்தை மட்டும் இருந்து பாருங்கள் !!!

விநாயகரை வழிபட மிக உகந்த திதி சதுர்த்தி திதியாகும் மற்ற தினங்களை காட்டிலும் சங்கடகரசதுர்த்தி நாளில் விநாயகரை வழிபட்டால் மிகுந்த பலன் கிடைக்கும்.

சங்கடம் தீர்க்கும் சங்கடஹரா சதுர்த்தி

பௌர்ணமிக்கு பிறகு நான்காம் நாள் வரக் கூடிய சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. மாதத்தில் ஒரு முறை வரும் இந்த தினத்தில் பிள்ளையாரை வணங்கி விரதம் இருந்தால் கேட்ட வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சங்கடா என்றால் துன்பங்கள் என்றும் ஹரா என்றால் அழித்தல் என்றும் பொருள் தரும். எனவே சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகரை வழிபட நம் வாழ்வில் அல்ல அனைத்து துன்பங்களையும் அளித்து
மகிழ்ச்சியை தருவார் என்பது ஐதீகம்.

சங்கடஹரா சதுர்த்தி விரத முறை

சங்கடஹரா சதுர்த்தி விரதம் இருக்க
நினைப்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி விட்டு அருகில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு சென்று பிள்ளையாரை 21 முறை சுற்றி வந்து வணங்கி விரதத்தை தொடங்க வேண்டும்.

விநாயகருக்கு அருகம்புல் மாலை மற்றும் வெள்ளறுகு மாலை சாத்தி வழிபட்டு விட்டு நீங்கள் மனதில் நினைத்த வேண்டுதலை
விநாயகரிடம் முறையிட்டு வரவேண்டும்.

சங்கடஹரா சதுர்த்தி விரதம் இருப்பவர்கள் விநாயகருக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டை, சுண்டல் ,பால், தேன் ,வாழைப்பழம் ஆகியவற்றை நெய்வேத்தியமாக வைத்து
வழிபடலாம்.

சங்கடஹரா சதுர்த்தி விரதம் இருந்தாலும் இருக்க முடியாதவர்களும் அன்றைய தினம் பசு மாட்டிற்கு பச்சரிசி, வெல்லம் ,வாழைப்பழம்
ஆகியவற்றை கொடுத்தாலே பல மடங்கு நன்மைகளை தேடித் தரும்.

சங்கடஹரா சதுர்த்தி விரதம் இருப்பவர்கள் மாலையில் அருகில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு சென்று அங்கு அபிஷேகத்தில்
கலந்துகொண்டு வழிபட்டு விட்டு விநாயகருக்கு நெய்வேத்தியமாக வைத்தது அல்லது கோவிலில் கொடுக்கும் பிரசாதத்தை சாப்பிட்டு
உங்கள் விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

சங்கடஹரா சதுர்த்தி விரதத்தின் பயன்கள்

தொழில் ,கல்வி ஆகியவற்றில் இருந்து வந்த தடைகள் விலகி எந்த காரியத்திலும் தடையின்றி செயல்பட விநாயகர் துணையாக இருப்பார்.

நீண்ட நாட்கள் ஆக இருந்து வந்த திருமணத் தடை நீங்கி தொடர்ந்து விரதம் இருப்பவர்களுக்கு விரைவில் திருமண யோகம் கைகூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *