சினிமாசெய்திகள்தமிழகம்யூடியூபெர்ஸ்

Rip captain : கேப்டன் சொர்க்கத்திற்கு போக தயாரான சந்தனப்பேழை

நடிகரும் தேமுதிக கட்சியின் நிறுவன தலைவருமான நம்மை விட்டு பிரிந்த நிலையில் இன்று அவரின் இறுதி ஊர்வலம் கோயம்பேட்டில் இருந்து தேமுதிக அலுவலகம் வரை நடக்கிறது.

கேப்டன் விஜயகாந்த்க்காக தயாரான சந்தனப்பேழையில் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் என்றும் இன்னொரு பக்கத்தில் கேப்டன் என்றும் பொறிக்கப்பட்ட உள்ளது.

உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நமது கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நேற்று காலை 28.12.2023 அன்று நம்மை விட்டு பிரிந்து விண்ணுலகம் சென்று விட்டார். இந்நிலையில் அவரது உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. அதன் பின்பு அலுவலகத்தில் அவரது உடல் அடக்கம் செய்ய இருந்ததால் அங்கு வைக்கப்பட்டது.

ஆனால் மக்கள் கூட்டம் வெள்ளம் போல் திரண்டதால் போலீஸாரால் சமாளிக்க முடியவில்லை அங்கு சரியான ஏற்பாடுகளில் யாததால் விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்து வந்த மக்கள் பெரும் சிரமப்பட்டனர். இந்நிலையில் விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் சென்னையில் உள்ள தீவு திடலில் வைக்கப்பட்டது அங்கு அஞ்சலி செலுத்த வரும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கழிவறை வசதி குடிநீர் வசதி ஆகியவை செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இவரது உடல் இன்று மாலை அடக்கம் செய்ய இருப்பதால் கோயம்பேட்டில் இருந்து தேமுதிக அலுவலகத்திற்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் கேப்டன் அவர்களை எடுத்து வர பிரம்மாண்டமான சந்தனப்பேழை தயாரானது. அதில் ஒரு பக்கத்தில் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் என்றும் ஒரு பக்கத்தில் கேப்டன் என்றும் எழுதப்பட்டு உள்ளது.

இறுதி ஊர்வலத்தை காண அவரது தொண்டர்களும் ரசிகர்களும் அழுது கொண்டே வாகனங்களை ஓட்டி செல்லும் காட்சிகளையும் நாம் பார்க்க முடிந்தது அவரது உடல் இன்று மாலை தேமுதிக அலுவலகத்தில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *