ஆவணி மாத பிறப்பிற்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு பக்தர்களுக்கு நோ தரிசனம்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் நாள் நடை திறக்கப்படுவது வழக்கம். ஐந்து நாட்கள் தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.
இதன்படி ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. நெய்யபிஷேகம் படி பூஜை போட சிறப்பு பூஜைகள் நடைபெறாது என தெரிவித்துள்ளனர்.
சபரிமலை ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் நடை 16.8.20 மாலை 5 மணிக்கு ஆவணி மாத பூஜைகளுக்காக திறக்கப்பட்டன. ஆகஸ்ட் 17ம் தேதி அதிகாலை 5 மணிக்கு சன்னதியில் நடை திறக்கப்படும்.
ஆகஸ்ட் 17 முதல் 21 வரை சிறப்பு பூஜைகள் இருக்காது. ஆவணி மாத பூஜைகள் ஹரிவராசனம் பாடும் ஊர்வலத்தின் நிறைவுடன் 21 ஆம் தேதி இரவு கோயிலின் நடை சாத்தப்படும்.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் இந்த மாதமும் சபரிமலைக்கு செல்ல அனுமதி இல்லை என்று திருவாங்கூர் தேவசம் அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆவணி மாத பிறப்பை முன்னிட்டு கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. பக்தர்களுக்கு இந்த முறையும் அனுமதி கிடையாது என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளன.
ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டு வருகின்றன.