செய்திகள்தமிழகம்தேசியம்

சபரிமலை பக்தர்கள் டிக்கெட்டுகள் புக் செய்யலாம்

பரந்து விரிந்த கானக பகுதியில் அமைந்துள்ளது இந்த சபரிமலை. கடந்த நவம்பர் 1ஆம் தேதி முன்பதிவு ஆரம்பமானது. இந்நிலையில் நாளொன்றுக்கு ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்க கேரள அரசு முடிவு செய்திருந்தன. இதற்கான புக்கிங் ஒரு மணி நேரத்தில் 60 நாட்களுக்கு நிறைவடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

  • பரந்து விரிந்த கானக பகுதியில் அமைந்துள்ளது இந்த சபரிமலை.
  • நாளொன்றுக்கு ஐயாயிரம் பேர் வரை தரிசனத்திற்காக முன்பதிவு
  • நவம்பர் 23 மற்றும் 24 தேதிகளில் மீண்டும் முன்பதிவை தொடங்க இருப்பதாக அறிவிப்பு.

ஐயப்ப பக்தர்கள் தொடர்ந்து தேவசம் போர்டிடம் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து நவம்பர் 23 மற்றும் 24 தேதிகளில் மீண்டும் முன்பதிவை தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகின. இந்தமுறை நாளொன்றுக்கு ஐயாயிரம் பேர் வரை தரிசனத்திற்காக முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.

சபரிமலையில் மண்டல கால

கொரோனா பரிசோதனை இருப்பினும் இரவு 7 மணிக்கு மேல் பம்பையில் இருந்து பக்தர்களுக்கு அனுமதி இல்லை. குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு அனுமதி இல்லை மாதிரியான கெடுபிடிகளும் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. சபரிமலையில் மண்டல காலங்களில் வருகின்ற கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக கேரள அரசு சில ஆண்டுகளுக்கு முன்பாக விர்ச்சுவல் க்யூ நடைமுறை கொண்டு வந்தன.

இந்தப் பெரும் கொரோனா தொற்று காலத்தில் இந்த முறையை அரசு பயன்படுத்திக் கொள்கிறது. இந்த ஆண்டு கொரோனா பரவலை அடுத்து ஐயப்பசாமி தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடு விதிமுறைகளை அமல்படுத்தின.

ஆன்லைன் மூலம் முன்பதிவு

கேரள அரசு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கேரள அரசு தெரிவித்தது. பத்தனம்திட்டா மாவட்டத்தில் பரந்து விரிந்த கானக பகுதியில் அமைந்துள்ளது இந்த சபரிமலை. இந்த மலை மீது கோயில் கொண்டிருக்கும் ஐயப்ப சுவாமி.

ஐயப்ப சுவாமியை காண மண்டல கால பூஜை நேரம் ஆன கார்த்திகை, மார்கழி மற்றும் தை மாதங்களில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் மாலை போட்டு இருமுடி சுமந்து வருவது வாடிக்கை தானே. இதை கொரோனா காலத்திலும் கடைபிடிக்கின்றனர் பக்தர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *