ரஷ்யா பல்கலைக்கழகம் மருந்தை மனிதர்களிடத்தில் வெற்றிகரமாக பரிசோதனை செய்தது.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயற்சிகள் நடந்து வந்தாலும் அவற்றில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அமெரிக்காவைச் சேர்ந்த கிளி சயின்சஸ் மொடேர்னா உள்ளிட்டவை முன்னணியில் உள்ளது.
இந்தியாவில் கொரோனவைரஸ் எதிரான தடுப்பு மருந்தை உருவாக்கும் பணியில் ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பார்த்து பயோ டெக் நிறுவனமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இணைந்து செயல்பட்டு வந்தது.
கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்தை மருத்துவ சோதனைக்கு உட்படுத்தி வெற்றி கண்டால் அதை இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அறிவித்திருந்தது.
மருத்துவ வல்லுனர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தடுப்பும் மருந்தை இவ்வளவு குறுகிய காலகட்டத்தில் கண்டறிவது சாத்தியமில்லாத ஒன்று என்ற கேள்வியை எழுப்புவது இந்தியாவில் ஆராய்ச்சி நிலையிலுள்ள எந்த கொரோனா தடுப்பு மருந்தும் 2021 ஆம் ஆண்டுக்கு முன்பு நடைமுறைக்கு வருவது சாத்தியமில்லாத ஒன்று என்று மத்திய அரசு விளக்கம் கூறியது.
தடிப்புத் தோல் அலர்ஜியை குணப்படுத்த பயன்படும் டோலிசுமாப் மருந்தை கொரோனவைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு கட்டுப்படுத்தப்பட்ட அவசரகால தேவைக்காக பயன்படுத்த இந்திய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்ததாக செய்திகள் வெளியானது.
கொரோனவைரஸ்நோய் தொற்றுக்கு எதிராக தடுப்பு மருந்து உருவாக்குவதற்கு உலகம் முழுவதும் 120 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
ரஷ்யாவை சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று மருந்தை உருவாக்கி அதை மனிதர்களிடத்தில் வெற்றிகரமாக பரிசோதனை செய்ததாக அறிவித்தது. அந்த நாட்டைச் சேர்ந்த செய்தி முகாமையான ஸ்புட்னிக் செய்தி வெளியிட்டுள்ளன.
இத்தகவலை இன்ஸ்டிடியூட் பார் டிரன்ஸ்லேஷனல் மெடிசின் அண்ட் பயோடெக்னாலஜி நிறுவனத்தின் இயக்குனர் வாடிம் டாரசோவ் தெரிவித்ததாக செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.
பரிசோதனையில் பங்கேற்ற முதல் குழுவினர் ஜூலை 15ம்தேதி, இரண்டாவது குழுவினர் ஜூலை 20-ஆம் தேதி வீடு திரும்புவார்கள் என்று அறிவித்துள்ளனர்.