பறவைக் காய்ச்சல் குறித்த வதந்திகள்
ஏவிஎன் இன்ஃப்ளூயன்ஸா என்ற பறவை காய்ச்சல் பரவி வருகின்றன. கொரோனா பாதிப்புகள் குறைய தொடங்க, பறவை காய்ச்சல் பரவி வருகின்றன. பறவை காய்ச்சல் காரணமாக கோழிக்கறி, முட்டை சாப்பிடுவதால் பறவை காய்ச்சல் வர வாய்ப்புள்ளதாக பலரும் சந்தேகமாக கருதுகின்றனர்.
இந்தியாவில் மட்டும் ஹிமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹரியாணா, கேரளா போன்ற மாநிலங்களில் பறவைகளுக்கு இடையே இந்த தொற்று பரவி மரணம் வரை கொண்டு செல்கின்றன. இதுவரை மனிதர்களுக்கு பரவவில்லை.
கோழி, வாத்து, முட்டை சாப்பிடுவதால் காய்ச்சல் பரவுகிறது என்று வதந்தி கிளம்பினால் இதை நம்ப வேண்டாம். மேலும் இவற்றைப் பரப்ப வேண்டாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். கோழிக்கறி, வாத்து கறி, முட்டை கறி எப்போது போல உண்ணலாம்.
எந்த பிரச்சனையும் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது. இத்தகவலை அரசு பொது நல மருத்துவர் கூறியுள்ளார். பின்வருமாறு அரை வேக்காடாக சாப்பிடாமல் நன்கு வேக வைத்து சாப்பிடலாம். இதனால் வைரஸ் முழுமையாக அழிக்கப்படுகிறது.
கோழி மற்றும் பறவை இனங்களின் மாமிசம்களையும், முட்டைகளையும் கையாள்பவர்கள் சமைத்த பிறகு கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். இந்த மாமிசத்தை உண்பவர்கள் நன்றாக சமைத்து உண்ணலாம். முட்டையை சமைக்கும் போது நன்றாக வேக வைத்து சாப்பிடலாம். வேக வைக்கும் போது வைரஸ்கள் கொல்லப்பட்டு விடும்.