பெண்மை போற்றும் ஆர்ஜே பாலாஜியின் ஜேஎஃப்டபிள்யு விருது
ஊடகங்களில் என்றுபல ஆபாசங்கள் இரண்டு அர்த்தம் கொண்ட வார்த்தைகள் மாடன் ட்ரெண்டிங் ஃபாஸ்ட் வேர்ல்ட் என பட பட பட என ஓடிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இந்த ஊடகத்தை உள்ளார்ந்த நேசிக்கும் பல மனிதர்கள் இங்கும் இருக்கின்றார்கள், இவர் தன்னுடைய ஊடகப் பணியை சும்மா தில்லா ஸ்டைலாக கெத்தாக செய்து வருகின்றார்.
யார் இவர் மெத்தப்படித்த மனிதரல்ல பன்னிரண்டாம் வகுப்பு பெயில் இவர் ஆனால் பட்டதாரி கூட இவர் முன்னாடி நின்னு பேசலாம், கற்கலாம். தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்கள் தன்னை முன்னிறுத்தி தன்னால் இயன்றதை செய்தவர் சினிமா விமர்சனங்களை பேசியவர் சினிமாவில் நடித்தவர் இன்று சினிமாவை இயக்குகிறார். இவர்தான் நம் ஆர்ஜே பாலாஜி என்ன ஒரு கம்பீரம் பேச்சில் ஒரு வேகம் எதையும் ஈசியாக எடுத்துக் கொள்கிற மனோபாவம் எளிமையான குணம் இவர் ஜேஃஎப் டபிள்யூ மீடியாவில் வழங்கும் விருதினை வழங்கி வந்திருந்தார்.
அங்கு ஒரு நிகழ்வைப் பதிவு செய்திருந்தார் இவர் ஜப்பான் சென்றிருந்தபோது அங்குச் சந்தித்திருந்த சென்னை பெண் பற்றிப் பேசியிருந்தா அதில் அவர் ஒரு கருத்தைப் பதிவு செய்திருந்தார். அது இந்த நாட்டில் இருக்கும் காமப் பேய்களின் கழுத்தை அறுப்பது போல் இருந்தது. நச்சுனு நாலு வார்த்தை அதாவது அந்த சென்னை பெண் ஜப்பானில் ஏழு வருடமாகத் தங்கி படித்துக் கொண்டிருக்கிறார். அந்த ஏழு வருடமும் பயம் இல்லாமல் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் சென்னையில் இருந்த 25 வருடங்களும் ஏதோ ஒரு பயம் யார் என்ன சொல்வார்களோ, செய்வார்களோ என்ற அச்சத்துடன் வாழ்ந்து வந்ததாக அந்த இளம்பெண் பதிவு செய்திருந்த கருத்தினை அந்த விருது வழங்கும் விழாவில் பகிர்ந்திருந்தார்.
உண்மையிலேயே இது சாட்டையடியாக இருந்தது அதிலேயே அவர் குறிப்பிட்ட ஒரு கருத்து இன்னும் ஆழமாக இருந்தது, தானும் இந்தச் சமுதாயத்தில் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்திருக்கின்றார். உண்மையில் அது இன்னும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது தான், ஒரு சினிமா நடிகர் சமுதாயத்தில் தான் ஒரு மனிதன் என்கின்ற உணர்வும் இந்தக் கேடுகெட்ட ஒரு சில ஆண்களின் செயலாளல் பெண்களின் சமுதாயம் அச்சத்தில் இருப்பது குறித்து தெரிவித்திருந்தார். இன்றைய சொசைட்டியில் பலவித திறமைசாலிகள் செலிபிரிட்டி கொஞ்சம் மனிதம் கலந்து வாழ்வது பெருமைக்கு உரியதாக இருக்கின்றது மனிதம் தழைக்கட்டும்