அட கடவுளே ஆர்.ஜே பாலாஜிக்கா இந்த நிலைமை!
மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் கதாசிரியர் மற்றும் இயக்குனர் திரு ஆர் ஜே பாலாஜியின் தாயிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாரையோ புதுசா சொல்றேன் நினைத்தீர்களா?
ட்ரரர டன் டன் டன் டன் டன் ட பன் டன்
நம்ம வானொலி தொகுப்பாளராக அறிமுகமாகி நகைச்சுவை நாயகனாக கலக்கி பின் கதாநாயகனாக களமிறங்கி தற்போது கதாசிரியராக உருவெடுத்து அந்தக் கதையை படமாக இயக்கியுள்ளார் ஆர் ஜே பாலாஜி.
பல போராட்டங்களுக்கு முன்னிருந்து குரல் கொடுத்த இவருக்கு இப்போது ஒரு தர்மசங்கடமான நிலை. கண் முன் நிற்கும் எதிரியை எதிர் கொள்ளும் துணிவு கொண்ட தமிழனாக இருக்கும் ஆர் ஜே பாலாஜிக்கு கண்ணுக்குத் தெரியாத இந்த கிருமியாலா சோதனை வரவேண்டும்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பாகுபாடு இல்லாமல் அனைவரையும் விழுங்குகிறது. அதை விழித்து சாய்க மருந்து வந்து கொண்டிருக்கும் நிலையில் இப்பொழுது இந்த செய்தி வெளிவந்துள்ளது.
தமிழகத்தில் தினமும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட கொரோனா தொற்றை கண்டறிகின்றனர் மருத்துவர்கள். இந்த நோய் பரவும் விதத்தை பெரிதாக கண்டறிய முடியாமல் தடுக்கவும் முடியாமல் அல்லல் பட்டு இருக்கும் இந்த நிலையிலிருந்து எப்பொழுது விடிவு காலம் வருமா?
ஆர் ஜே பாலாஜியின் தாயிற்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு பாசிட்டிவ் என்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் சென்னை அமைந்தகரை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை தரப்பட்டு வருகிறது.
உறுதிகொண்ட ஆர் ஜே பாலாஜி இந்த நேரத்திலும் மனம் தளராமல் உறுதியோடு இருக்க தோள் கொடுப்போமாக.