செய்திகள்தமிழகம்தேசியம்

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கெடுபிடிகள் தமிழக காவல்துறை

புத்தாண்டு இன்னும் இரண்டு நாட்களில் தொடங்க இருக்கின்றது. புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான பார்ட்டிகளில் மக்கள் ஈடுபாட்டுடன் இருக்கின்றன.ர் பெருநகரங்கள் முதல் சிறிய ஊர்கள் வரை புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுவது வழக்கம் ஆகியுள்ளது. சென்னையில் இந்த ஆண்டு முடிந்ததும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரோடுகள் மற்றும் பேச்சுகள் என பொது இடங்களில் மக்கள் கொண்டாட்டமாக குதூகலமாக கூடி கொண்டாட திட்டமிட்டு வருகின்றனர்.

புதுவருடப்பிறப்பு கொண்டாட்டத்தில் கெடுபிடிகளை வைக்க போலீஸ் கமிஷனர் சங்கர் ஜி தலைமையிலான கூட்டம் தீர்மானித்துள்ளது. பைக் ரேஸ், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது ஆகியவை அனுமதிக்கபடாது. நிச்சயமாக மாஸ்க் அணிய வேண்டும். அனைத்து வணிக நிறுவனங்களிலும் வெப்ப பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் 2020 முதல் கடந்த இரண்டு ஆண்டுகளாக மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட மறுப்பு தெரிவிக்கப்பட்டது. வரும் புத்தாண்டிலும் மாநிலத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

ஒமைக்கிரானின் உருமாறிய பி எப் 7 கொரோனா தொற்று பரவல் தெற்காசிய நாடுகளில் அதிகரித்து காணப்படுகின்றது. அமெரிக்காவும் இதற்கு விதிவிலக்கல்ல, இந்தியாவின் இது கோர தாண்டவம் ஆடாமல் தடுக்க மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல எடுத்து வருகின்றனர். அதன் விளைவாக பாதிக்கப்படுபவர்கள் சளி மாதிரி ஆகியவை ஆய்வு செய்யப்படுகின்றன.

இந்த ஆண்டு போலீசதிகாரிகள் ஹோட்டல்கள், நீச்சல் மற்றும் புதிதாக இளைஞர்கள் உருவாக்கும் கொண்டாட்ட அமைப்புகள் ஆகியவற்றை கண்காணிக்கின்றனர். மேலும் விடுதிகளில் எச்சரிக்கை மணிகள் பல அடிக்கப்பட்டுள்ளன. போலீசார் கண்காணிப்புக்கு உட்பட்டு தான் இந்த ஆண்டும் கொண்டாட்டங்கள் இருக்க வேண்டும்.

புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஒரு மணி நேரம் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .புத்தாண்டு தினத்தில் இளைஞர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பைக் ரேஸ்கள் தவிர்க்க வேண்டும் என்றும் மது போதை ஆகியவற்றை பயன்படுத்தி வாகனங்கள் ஓட்டக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சோதனை சாவடிகள் பெருநகரங்களில் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கார் போன்ற வாகனங்களில் வருவோர்கள் மது அருந்தி இருக்கக் கூடாது என்றும் மீறினால் ஃபைன் விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஃபைன் தொகை 10,000 க்கு மேல் இருக்கும் என்றும் தகவல்கள் கிடைக்கின்றன இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திலும் கட்டுப்பாடுகள் அதிகம் விதிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் கவனமுடன் செயல்படுவார்கள் என்றும் நம்பப்படுகின்றது நமது ஆரோக்கியத்திற்கு நாமே முக்கிய பொறுப்பாக இருக்க வேண்டும் அந்த வகையில் அனைவரும் பாதுகாப்புடன் புத்தாண்டை வரவேற்று கொண்டாட்டங்களை இனிதே முடித்துக் கொள்ளலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *