கண் பிரச்சனை, கொழுப்புகளை குறைக்க, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த!
உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்க வேண்டுமா? கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை பெற வேண்டுமா? இரத்த அழுத்த அளவுகளை குறைக்க வேண்டுமா? ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தணுமா? மற்றும் ஈறு தொடர்பான நோய்களை குணமாக்க வேண்டுமா? இந்த பிரச்சனைகள் அனைத்தையும் ஒரே உணவில் சரி செய்யலாம்.
- கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை பெற வேண்டுமா?
- ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தணுமா?
- கொழுப்புகளை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்க வேண்டுமா?
பல நன்மைகளை கொண்ட வெங்காயத்தாள்
ஸ்பிரிங் ஆனியன்ஸ் என சொல்லப்படும் வெங்காயத்தாள் பல நன்மைகளை கொண்டுள்ளன. இவை உணவுகளில் அதிகமாக பயன்படுத்தப்படும். இந்த வெங்காயத்தாளை வீட்டிலேயே எளிதாக வளர்க்கலாம். சிறிய தொட்டியில் மண் நிரப்பி அதில் ஆங்காங்கே சிறிய வெங்காயத்தை புதைத்து வைக்க வேண்டும்.
சத்துக்கள் நிறைந்த வெங்காயத்தாள்
ஒரு மாதத்தில் வெங்காயத்தாள் கிடைத்து விடும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இதை அறுவடை செய்து புதிதாக நட்டு வைக்கலாம். வெங்காயத்தில் உள்ளதைப் போலவே வெங்காயத்தாளில் சத்துக்கள் நிறைந்துள்ளன. விட்டமின் கே, ஏ, பி2, சி, குரோமியம், மங்கனீஸ், நார்ச்சத்துக்கள், பாஸ்பரஸ், பொட்டாசியம் நிறைந்து காணப்படுகின்றன.
வாசனைக்காகவும், சுவைக்காகவும் ஸ்பிரிங் ஆனியன்ஸ்
பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள். செரிமான உபாதைகளுக்கு நிவாரணம் வழங்கும். வாசனைக்காகவும், சுவைக்காகவும் பயன்படுத்தப்படும் ஸ்பிரிங் ஆனியன். பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க உதவுகிறது. இதை தெரிந்து கொண்ட நீங்களும் வீட்டிலேயே தயாரித்து தரமானதாக உபயோகிக்கலாம்.