சினிமாசெய்திகள்

ரம்யா பாண்டியன் வீட்டில் கொரோனாவுக்கு என்னாச்சு தெரியுமா!

குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் புகழ் ரம்யா பாண்டியனின் உறவினர் அருண் பாண்டியன் என்று அறிமுகப்படுத்தினால் தற்போதைய 20ஸ் கிட்ஸ்ஸிற்கு தெரிந்திருக்க கூடும். 80, 90ஸ் கிட்ஸிற்கு ஊமை விழிகள் படத்தில் பெரிதாகப் பிரபலமானவர் அருண் பாண்டியன். இவர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளார்.

அருண் பாண்டியன்

திரையுலகில் காலங்களுக்கு ஏற்றவாறு முன்னணி நடிகர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். எண்பதுகளில் முக்கிய முன்னணி நடிகர்களுள் அருண் பாண்டியனும் ஒருவர். சமீபத்தில் அன்பிற்கினியாள் என்ற தமிழ் திரைப்படத்தில் அருண் பாண்டியனும் அவரின் மகள் கீர்த்தி பாண்டியனும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : தனுஷுடன் நடித்து தனுஷாகவே மாறும் தீனா

கீர்த்தி பாண்டியன் தன் தந்தை அருண்பாண்டியனின் உடல்நலத்தை பற்றிய முழு விவரத்தை சமூகவலைதளத்தில் ஒர் மடலாக பகிர்ந்துள்ளார்.

பதினைந்து நாட்களுக்கு முன்பு சிறிய இதய வலியால் திருநெல்வேலியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருண் பாண்டியன் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அந்தப் பரிசோதனையின் முடிவு பாசிட்டிவ் என்று வர ஏழு நாட்கள் தனிமையில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு சர்க்கரை வியாதியும் இருக்க பெற்றமையால் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைய 15 நாட்கள் ஆனது. மேலும் அவர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை எடுத்தமையால் கொரோனாவின் தாக்கம் பெரிதாக இல்லை என்றும் கூறியுள்ளார்.

இதய கோளாறுக்கான காரணத்தை கண்டறிய மேலும் மீனாக்ஷி மெடிக்கல் ஹாஸ்பிடலுக்கு சென்று இருதய பரிசோதனையான ஆஞ்சியோகிராம் மேற்கொண்டதில் அவருக்கு இரண்டு அடைப்புகள் இருப்பதை கண்டறிந்தனர்.

அருண் பாண்டியன் அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு ஆரோக்கியமான நிலைக்கு திரும்பியுள்ளார். இந்த அனுபவத்தை பகிர்வது அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி எடுத்துக் கொள்வது அவசியம் என்பதை அந்தப் பதிவில் சுட்டிக்காட்டுகிறார்.

https://www.instagram.com/p/COkvfr6L8hx/?igshid=1pm3bbpl37d2j

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *