முகம் வசீகரத்திற்கு டிப்ஸ் தரும் நடிகை
வறண்ட சருமத்திற்கு முக சுருக்கங்களை நீக்குவதற்கும், உங்களுடைய வயது இளமையாக காட்டுவதற்கும், அழகுக் கலை நிபுணராக ரசிகர்களுக்கு வழிகாட்டுகிறார் ரகுல் ப்ரீத் சிங். வீட்டில் சும்மா இல்லாமல் தனக்கு தெரிந்த அழகுக்கலை ரகசியங்களை யூ டியுப் வழியாக ரசிகர்களுக்கு கற்றுத்தருகிறார்.
இந்த வீடியோவுக்கு ஸ்கின்கேர் சீரிஸ் என்ற பெயரில் பதிவிட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இதனை ஷேர் செய்து உற்சாகப்படுத்தி உள்ளார். மேலும் தான் மீண்டும் இன்னொரு வீடியோவுடன் வருவதாகவும் உங்களுடன் எனக்கு பிடித்த வாழைப்பழம் முகக்கவசம் பற்றி சொல்லப்போகிறேன் என்று கூறியுள்ள ரகுல் மூன்று நிமிடங்களுக்கு அந்த முகக் கவசம் செய்து எப்படி செய்யலாம் என்பதை விளக்கியுள்ளார்.

நாம் அணியும் முகக் கவசம் கொரோனா தடுப்பதற்கானதல்ல. அழகுக்கலை ரகசியமான முகத்தின் வசீகரத்திற்கு என்று குறிப்பிட்டார். வாழைப்பழத்தில் பொட்டாசியம் இருப்பதால் முகத்திற்கு பாதுகாப்பை அளிக்கும்.
முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி, முகத்தின் நிறம் மாறாமல் இருப்பதற்கு இந்த வாழைப்பழம் உதவும் என்றும் இதனுடன் எலுமிச்சை பழச்சாறு கலந்தும் செய்து காட்டியுள்ளார். இந்த கவசத்தை நீங்களும் செய்து விரைவில் பயன்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன் என்று டிப்ஸ்களை அள்ளி கொடுத்திருக்கிறார்.

வாழைப்பழம் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் வாழைப்பழத்தின் நன்மைகளையும், எலுமிச்சையின் நன்மைகளையும் விளக்கும் ரகுல் இந்த ஃபேஸ் பேக்கை செய்து காட்டுகிறார். சரும ஆரோக்கியம் வாழைப்பழம் செய்ய டிப்ஸ் தரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் முக கவசத்தை நீங்களும் ட்ரை பண்ணுங்க.