தமிழகத்தில் கன மழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் தகவல்
செப்டம்பர் மூன்றாம் தேதி கேரளா லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேலும் செப்டம்பர் 6 வரை தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம் செப்டம்பர் மூன்றாம் தேதி தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று அறிவித்துள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்சி விமான நிலையம் மற்றும் விருதுநகர் மாவட்டம் சாத்தூர், திருப்பூர் மாவட்டம் மூலனூர், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, மானாமதுரை சிவகங்கை மாவட்டம், விழுப்புரம் கொள்ளிடம், நாகப்பட்டினம் மாவட்டம், ஈரோடு மாவட்டம் தாளவாடி, திருச்சுழி விருதுநகர் மாவட்டம் ஆகிய இடங்களில் தலா 7.
நீடாமங்கலம் திருவாரூர் மாவட்டம் மற்றும் பாடலூர், பெரம்பலூர் மாவட்டம் ஆகிய இடங்களில் 8, நிலக்கோட்டையில், காமாட்சிபுரம் திண்டுக்கல் மாவட்டம் 11, முண்டியம்பாக்கம் விழுப்புரம் மாவட்டம் அதிகபட்சமாக 15, போன்ற இடங்களில் தலா 5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளன.
நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ். குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, மதுரை, கரூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் போன்ற பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளன.