ராகுல் டிராவிட் சிறந்த பேட்ஸ்மேனாக முதலிடம் பிடித்தார்
ராகுல் டிராவிட் சச்சின் டெண்டுல்கரை கடந்த 50 ஆண்டுகளில் தலைசிறந்த இந்திய பேட்ஸ்மேன்கள் என்று பிஸ்டன் நடத்திய கருத்துக் கணிப்புகளில் பின்னுக்குத்தள்ளி உள்ளார் ராகுல் டிராவிட் முதலிடம் பிடித்தார்.
பிஸ்டன் கிரிக்கெட்டின் பைபிள் என கருதப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளாக தலைசிறந்த இந்திய பேட்ஸ்மேன்கள் என்ற கருத்துக் கணிப்பை பேஸ்புக்கில் நடத்தியது.
பேஸ்புக்கில் நடத்திய கருத்துக் கணிப்பில் மொத்தம் 11,400 ரசிகர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் பதிவான மொத்த வாக்குகளில் 52 சதவீதம் பெற்று, ராகுல் டிராவிட் முதலிடம் பிடித்தார்.
சச்சின் டெண்டுல்கர் 48 சதவீத வாக்குகளுடன் இரண்டாமிடம் பிடித்தார். சுனில் கவாஸ்கர் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். சுனில் கவாஸ்கர் இப்போது இந்திய கேப்டன் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி மூன்றாம் இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 15,921 ரன்களையும், திராவிட் 13,758 ரன்களையும் எடுத்தனர். கவாஸ்கர் 10,122 ரன்களை 125 டெஸ்ட் போட்டிகளில் எடுத்திருந்தார்.
டெஸ்ட் போட்டிகளில் பொறுமையாக ஆடுவது போலவே ராகுல் டிராவிட் நிதானமாகவே வாக்குகள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால் இறுதியா வெற்றி பெற்றுள்ளார்.
ராகுல் டிராவிட் சிறந்த பேட்ஸ்மேனாக கருதப்பட்டது. வெளிநாட்டு தொடர்களில் அவர் விளையாடிய விதம் தான் காரணமாக இருக்கும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.
2004 ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் அடிலைட் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 233 ரன்களையும், இரண்டாவது இன்னிங்சில் 78 ரன்கள் எடுக்க இந்திய அணி கங்குலி தலைமையில் பிரமாதமான டெஸ்ட் வெற்றியை பெற்றிருந்தது.
ராகுல் டிராவிட் 94 டெஸ்ட் போட்டிகளை வெளிநாட்டு ஆடுகளத்தில் விளையாடி இருந்தார். அதில் மொத்தம் 7,690 ரன்களை குவித்து இருந்தார்.
இவற்றில் 64 டெஸ்ட் போட்டிகளை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் விளையாடி உள்ளார்.
இந்த நாடுகளுக்கு இடையே விளையாடி மொத்தம் ஆயிரத்து 443 ரன்களை குவித்து வெற்றி பெற்றார். இவருடைய ரன்கள் சராசரியாக 52 ரன்கள் என்பதாகும். சச்சினை பின்னுக்கு தள்ளிய ராகுல் டிராவிட் சிறந்த பேட்ஸ்மேனாக இப்பொழுது விளங்குகிறார்.